திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து வாளாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி வளாகத்தின் பின்புற கட்டிடத்தில், நேற்று வெள்ளிக்கிழமை போதையில் ஒரு பெண்ணுடன் இளைஞர் இருந்துள்ளார். இதை அறிந்த அப்பள்ளி ஆசிரியர்கள் வீடியோ எடுக்க சென்றபோது மது போதையில் நள்ளிரவு இங்கு வந்து படுத்திருந்தோம், இப்போது செல்கிறோம் நாங்கள் இங்கு வந்தது என்ன தவறு என மிரட்டும் தோனியில் பேசியுள்ளார்.
பள்ளியில் நள்ளிரவில் படுத்துவிட்டு செல்வதற்கு இது விடுதியா எனக் கேட்டதற்கு உங்களுக்கு என்ன பிரச்சனை என மிரட்டி உள்ளார்.
இது குறித்து காவல்துறையினருக்கு, தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நள்ளிரவில் பள்ளிக்குள் வந்து "இருவரும் ஒன்றாக படுத்திருந்தும் தற்போது நாங்கள் கிளம்புகிறோம்" என மிரட்டிய சம்பவம் கல்வியாளர் மற்றும் சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்களுக்கு இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப் பள்ளியில் இரவு நேரத்தில் பாதுகாவலர் யாரும் இல்லையா ஏன் அங்கு பாதுகாவலர் நியமிக்கப்படவில்லை, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
பள்ளியில் கடந்த ஆறு மாதங்களாக குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளது. இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் காவல்துறைக்கு தெரிவித்ததால் உள்ளூர்வாசிகள் பள்ளி ஆசிரியரை மிரட்டுவதாகவும் குறிப்பாக, தொடர்ந்து குற்றச்சம்பங்களில் ஈடுபட்டு வருபவர் வாளாடி புது ரோடு பகுதியை சேர்ந்த நவீன் என்பதும் தெரியவந்துள்ளது.
தற்போது அப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் அறையின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே மது அருந்திவிட்டு மின்விசிறி டியூப் லைட், போன்றவற்றை அடித்து உடைத்துள்ளனர்.
காவல்துறைக்கு தெரிந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.இந்த குற்றச்செயலை தடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்