இரண்டு வருடம் சிறை தண்டனை, அனுபவித்த கணவன் கொல்லப்பட்டதாக சொன்ன மனைவி, கோர்ட்டில் நேரில் வந்த மர்மம்,மைசூர் நீதிமன்றம் சந்ததித்த வினோத வழக்கு,என்னதான் நடந்தது என விரிவாக காண்போம்.
2020 டிசம்பர்ல, குடகு மாவட்டத்துல மல்லிகேன்னு ஒரு பெண், மாயமாயிட்டதா அவரோட கணவர் குருபர சுரேஷ் புகார் கொடுத்தாரு. அவருக்கு அப்போ வயசு 38. ஒன்பது மாதம் கழிச்சு, பெட்டதபுரா காவல்துறை ஒரு பெண்ணோட உடலை கண்டுபிடிச்சு, அதை மல்லிகேன்னு சொல்லி, சுரேஷ மிரட்டி, "இது உன் பொண்டாட்டி உடல்"ன்னு ஒப்புதல் வாங்கி, கொலை வழக்குல கைது செஞ்சாங்க. அப்புறம் இரண்டு வருடமா அவரு சிறையில தவிச்சாரு. ஆனா, ஒரு நாள் கோர்ட்டுல அவரு மனைவி மல்லிகே உயிரோட வந்து நின்னு, "நான் இறக்கலையே"ன்னு சொன்னதும் எல்லாருக்கும் தூக்கி வாரி போட்டுச்சு.
இந்த சம்பவம் மைசூரு ஐந்தாவது மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்துல நடந்துச்சு. நீதிபதி குருராஜ் சோமக்கலவர், "இது என்னடா இப்படி ஒரு விசித்திரமான வழக்கு?"ன்னு அதிர்ச்சியடைஞ்சு, காவல்துறையோட தவறான விசாரணைய கடுமையா விமர்சிச்சாரு. "இந்த சார்ஜ்ஷீட் எல்லாம் வேஸ்ட், புதுசா விசாரிக்கணும்"னு மைசூரு எஸ்பிக்கு உத்தரவு போட்டாரு.
காவல்துறை எப்படி தப்பு செஞ்சாங்க?
இந்த சம்பவத்துல காவல்துறையோட பெரிய தவறு என்னன்னா, எந்த உறுதியான ஆதாரமும் இல்லாம ஒரு உடலை மல்லிகேன்னு முடிவு எடுத்ததுதான். நீதிபதி கேட்டாரு, "இந்த உடல் அவளோடதுன்னு நிரூபிக்க என்ன ஆதாரம் இருக்கு? கேள்விப்பட்டத வச்சு சார்ஜ்ஷீட் போட்டு ஒருத்தர சிறையில போட்டுட்டீங்களே?"ன்னு. பெட்டதபுரா காவல் நிலையத்துல வேலை செஞ்ச ஐந்து போலீஸ்காரங்களையும் கோர்ட்டு கேள்வி கேட்டு, அவங்களுக்கு நோட்டீஸ் அனுப்புச்சு.
இதுல முக்கியமான விஷயம், வழக்கு நடந்த 2.5 வருஷத்துல ஏழு சாட்சிகள், "மல்லிகே உயிரோடதான் இருக்கா"ன்னு சொல்லியிருக்காங்க. ஆனாலும், காவல்துறை அத கண்டுக்காம, சுரேஷ தான் கொலையாளின்னு முடிவு செஞ்சு வழக்க தொடர்ந்தாங்க. இது ஒரு சாதாரண தவறு இல்ல; ஒரு மனுஷனோட வாழ்க்கையையே புரட்டி போட்டுட்டாங்க.
மல்லிகே எங்க போனாங்க?
கொல்லப்பட்டதா, சொன்ன மல்லிகே இரண்டரை வருடமா எங்க போனாங்க இப்போ மட்டும் எப்படி வந்தகனு கேள்வி எழும், மல்லிகே சுரேஷய விட்டு பிரிஞ்சு, குடகுல வேற ஒருத்தரு கூட வாழ்ந்துட்டு இருந்தாங்க. ஒரு சாட்சி அவங்கள மதிகேரில பார்த்து, போட்டோ பிடித்து எடுத்துட்டு வந்து, சுரேஷ் கிட்ட காமிச்சு அடையாளம் கண்டுபிடிச்சு, கோர்ட்டுக்கு கொண்டு வந்தாங்க. இது ஒரு சினிமா கதை மாதிரி இருந்தாலும், இதுல ஒரு குடும்பத்தோட வலியும், சமூகத்தோட அலட்சியமும் தெரியுது.
நீதிமன்றம் என்ன செஞ்சது?
நீதிபதி, "இது நாட்டுல மூணாவது அல்லது நாலாவது முறையா இப்படி ஒரு சம்பவம் நடக்குது"ன்னு அதிர்ச்சிய சொன்னாரு. மைசூரு எஸ்பி விஷ்ணுவர்தனுக்கு உத்தரவு போட்டு,சுரேஷ்,மல்லிகை மற்றும் சாட்சிகளை திரும்பவும் விசாரிச்சு, புது வாக்குமூலங்கள பதிவு செஞ்சு, ஏப்ரல் 17-க்குள்ள அறிக்கை தாக்கல் செய்ய சொல்லியிருக்காங்க. சுரேஷோட அப்பா, "என் பையனுக்கு இவ்வளவு அநியாயம் செஞ்ச காவல்துறை மேல நடவடிக்கை எடுங்க"னு கோரிக்கை வச்சிருக்காரு.
இப்படி ஒரு வித்தியாசமான, வழக்கை இந்த நீதிமன்றம் எப்படி கையாளப்போது,சுரேஷ் மற்றும் அவரோட குடும்பத்துக்கு தகுந்த நியாயம் கொடுக்கணும்னு, மக்கள் எதிர்பாத்துட்டு இருகாங்க.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்