மாவட்டம்

“கல்யாணம் செய்துக்கிறோம் கவுண்டர் வீட்டு பையனையே…” சாதியத்தை பரப்பும் வள்ளி கும்மி கே.கே.சி பாலுவுக்கு கலைமாமணியா!? - கொதித்த வன்னியரசு!!

வள்ளி கும்மி என்றால் எதோ முருகன் - வள்ளி வாழ்க்கையை கூறுவதுதானே, அதற்கும் சாதிய சர்ச்சைக்கும் என்ன சம்மந்தம் என்ற கேள்வி எழலாம்.

Saleth stephi graph

சமீபத்தில் தமிழ்நாடு அரசு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை அறிவித்திருந்தது. இந்த விருது, பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்பட்ட ஒன்றாகும். அதன்படி, கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதினையும்  தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கத்தில்  அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் விருதாளர்களை முதல்வர் கவுரவிப்பார் என அறிவிக்கப்பட்டது.  பாரதியார் விருது முனைவர் ந.முருகேச பாண்டியனுக்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது பத்மபூஷன் டாக்டர் கே.ஜே.யேசுதாஸுக்கும், பால சரஸ்வதி விருது பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாளுக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திரைத்துறையினர் மணிகண்டன், அனிருத், ஸ்வேதா மோகன் உள்ளிட்ட கலைத்துறைக்கு பங்களித்த பலருக்கும் இந்த விருதினை அறிவித்தனர். 

இந்த விருது கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியின் பொருளாளர் கே.கே.சி பாலுவிற்கும் கலை மாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கொங்கு மண்டலமான ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில், தமிழ் கடவுள் முருகன் மற்றும் வள்ளியின் வாழ்க்கை குறித்தான வள்ளிக்கும்மி ஆடுவதற்கான பயிற்றுநராக கே.கே.சி பாலு இருக்கிறார்.

சாதிய சர்ச்சை  

வள்ளி கும்மி என்றால் எதோ முருகன் - வள்ளி வாழ்க்கையை கூறுவதுதானே, அதற்கும் சாதிய சர்ச்சைக்கும் என்ன சம்மந்தம் என்ற கேள்வி எழலாம். ஆனால் இந்த வள்ளி கும்மி ஆட்டத்தில் பெண்கள் மட்டுமே இருப்பர். பெரும்பாலும் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு கொங்கு மக்கள் தேசியக் கட்சியினர் வள்ளிக்கும்மி பயிற்சியளித்து வருகின்றனர்.

சாதியை முக்கியமான சர்ச்சை என்னெவென்றால் அகமண முறையை ஆதரிக்கும் நோக்கோடு இந்த ஆட்டத்தில் ஒரு உறுதிமொழி எடுக்கப்படும், ‘‘சத்தியம் சத்தியமே சின்னமலை சத்தியமே… கல்யாணம் செய்துக்கிறோம் கவுண்டர் வீட்டு பையனையே... இதுபோதும், இதுபோதுமே எனக்கு வேறேதும் வேண்டாம் அம்மா,’’ எனக்கூறி, அந்தப்பெண்களை உறுதிமொழி ஏற்க வைத்த சம்பவம் கடந்த 2023 -ஆம் ஆண்டே பெரும் சர்ச்சையாயிருந்தது. 

இந்த சூழலில்தான் வள்ளி கும்மி பயிற்றுனரான கே.கே.சி பாலு -விற்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில்தான் விசிக -வின் வன்னியரசு “பெண்களை, வலுக்கட்டாயமாக உறுதிமொழி ஏற்க வைத்து, அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை பறித்து சாதியத்தை பரப்பி வரும், கே.கே.சி பாலுவுக்கு அறிவிக்கப்பட்ட கலைமாமணி விருதை திரும்பப்பெற வேண்டும்” என பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.