கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்!!

Malaimurasu Seithigal TV

2023-24-ம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்க உள்ளது. 

2023-24 கல்வியாண்டின், பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியில் வெளியிடப்பட்டு புதிய அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1,54,378 காலி இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

அதற்கான கலந்தாய்வு கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது.  முதலில் மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், விளையாட்டு பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நிறைவு பெற்றது.

இந்நிலையில், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள், கலந்தாய்வில் www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.