பொழுதுபோக்கு

ஜேசனுக்கு ‘ரெட் கார்ட்’? Groupism-ஐ அம்பலப்படுத்திய விஜய் சேதுபதி.. இன்னைக்கு ஒரு குறும்படம் கன்பார்ம்?

"காமன்மேனாக உள்ளே வந்த ஜேசனுக்கு ரெட் கார்டு வழங்குவது குறித்த விவாதங்கள் ஏற்கெனவே.."

Muthu Lakshmi

தமிழில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 9 வாரங்களை நிறைவு செய்து 10 வாரத்தில் சுவராஸ்யமாக அடியெடுத்து வைத்துள்ளது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த ரியாலிட்டி ஷோ நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. போட்டியாளர்களுக்கு இடையிலான மோதல்கள், பர்சனல் அட்டாக், டாஸ்க்கில் ஏற்படும் சண்டைகள் என இந்த சீசன் விறுவிறுப்பாக மாறியுள்ளது. 

அதிலும் இந்த வாரம்.. 10 சீசனிலும் இல்லாத ஒரு டாஸ்கை கொடுத்திருந்தார் பிக் பாஸ். அதாவது இந்த வாரத்தில் பிக் பாஸ் குரல் ஒலிக்காது.. அவருக்கு பதில் ஒரு ஹவுஸ்மேட் ஜூனியர் பிக் பாஸாக பதவியேற்று வழிநடத்தலாம் எனும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் முதல் ஆளாக வினோத் பாபு தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜூனியர் பிக் பாஸாக வழிநடத்தினார். இந்த டாஸ்கில் சில சலுகைகளும் வழங்கப்பட்டது. ஒரு வாரம் தொடர்ந்து ஜூனியர் பிக் பாஸாக இருக்கும் நபருக்கு டிக்கெட் டு பைனல் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. இதில் வழக்கம் போல் ஹவுஸ்மேட்-கள் ‘Groupism’ கேம் விளையாடினார்கள்.

இதனால் பலருக்கு இந்த ஜூனியர் பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில் நடந்த சண்டைகளும் ஏராளம். குறிப்பாக, ஜேசனின் அணுகுமுறை பிக்பாஸ் வீட்டிற்குள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். முதல் நாளில் இருந்து மற்ற ஹவுஸ்மேட்-களின் கேமை அவர் கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும், எமோஷனலாக பேசி அவர்களைத் தனது வழிக்குக் கொண்டுவருவதாகவுமே இருந்துள்ளது. மேலும் ஒரு இடத்தில் ஜேசன் TTF வாசனை அடிக்கும் நிலைக்கும் சென்றுள்ளார்.

அவரின் அக்கோரோஷம்னா அணுகுமுறைக்கு ஹவுஸ்மேட்-களே ஒரு அடி பின்வாங்கினார்கள். பொதுவாக பிக்பாஸ் வீட்டில் ஒருவரை ஒருவர் அடிக்கும் நிலைக்கோ அல்லது கொடூரமாக தாக்கினாலோ அவர்களுக்கு ‘ரெட் கார்டு’ வழங்கப்படுவது வழக்கம். இதற்கு முன் சீசனில் VJ பார்வதி மற்றும் கம்ருதினுக்கு, ஹவுஸ்மேட் ஒருவரை தாக்கியதற்கு ‘ரெட் கார்டு’ வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் காமன்மேனாக உள்ளே வந்த ஜேசனுக்கு ரெட் கார்டு வழங்குவது குறித்த விவாதங்கள் ஏற்கெனவே இணையத்தில் எழுந்துள்ளன. குறிப்பாக நேற்றைய புரோமோவில் ஜேசனின் கேம் குறித்து போட்டியாளர்கள் விவாதித்துள்ளனர். அவர் மற்றவர்களின் தனிப்பட்ட விளையாட்டையும் பாதிப்பதாக லட்சுமி பிரியா மற்றும் வினோத் பாபு உள்ளிட்டோர் பேசியிருந்தனர்.
இன்று வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதியும், ‘Groupism’ குறித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நிச்சயம் ஜேசனின் இந்த அட்டாக் குறித்து பேசலாம்.. மேலும் குறும்படம் போடவும் வாய்ப்புள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.