vijay ajith recent press meet 
பொழுதுபோக்கு

ஒரே வாரத்தில் அடுத்தடுத்து பிரஸ்மீட்..! வாழ்த்து சொன்ன AK … வீட்டுக்கு போகச் சொன்ன விஜய்..!

இவர்கள் இருவருக்குமே இது ஒரு நல்ல ஆண்டு என்றே சொல்ல வேண்டும். ..

Saleth stephi graph

தமிழ் சினிமாவின் மரபு படி எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி-கமல், ஆகியோருக்கு பிறகு ஆதர்ஷ இரு துருவங்களாக இருந்த விஜய் -அஜித் தங்கள் வழக்கை பாதையை வேறு வேறு போக்கில் மாற்றிக்கொண்டுள்ளனர். எதேச்சையாக நடிக்க வந்த அஜித் ரேஸிங் மேல் தான் கொண்ட பெரும் ஈர்ப்பால் உச்சநட்சத்திரம் ஆன பிறகும் கூட கார் ரேஸிங் கிளம்பிவிட்டார்.

அரசியலில் நுழையக் தக்க சமயம் பார்த்திருந்த நடிகர் விஜய்,Time to lead என்கிற மனநிலையோடு தமிழக வெற்றி கழகத்தை உருவாக்கி, அரசியலில் குதித்துவிட்டார்.

இந்தநிலையில் இவர்கள் இருவருக்குமே இது ஒரு நல்ல ஆண்டு என்றே சொல்ல வேண்டும். அவருக்கு ரேசிங்கிலும் இவருக்கு அரசியலிலும் நல்ல வரவேற்பு கொடுக்க பட்டு வருகிறது.

ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள ஒற்றுமை என்னெவென்றால் இருவருமே பெருமளவு ஊடகச்சந்திப்பை தவிர்த்து விடுவர்.விஜயை கூட ஒரு விதத்தில் எடுத்துக்கொள்ளலாம் ஆனால் அஜித் ஊடகத்தை சந்தித்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகப்போகிறது. இவர்கள் இருவரும் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். அதிலும் ஒரே வாரத்தில்.. இது எதிர்பாராத நிகழ்வு என்றாலும்.. இவர்களின் பேச்சு பெருமளவில் கவனிக்கப்பட்டு வருகிறது.

அரசியல்வாதியாக முதல் சந்திப்பு 

அரசியல் கட்சியை துவங்கிய பிறகு விஜய் முதன்முதலாக செய்தியாளர்களை சந்தித்து உள்ளார். சொல்லப்போனால் இந்த சந்திப்பில் பெரிதாக ஒன்றும் பேசவில்லை, தனது பயணத்திட்டம் பற்றித்தான் பேசியுள்ளார். 

துரை மக்கள் எல்லோருக்கும் என்னுடைய வணக்கம்.நம் நண்பர்கள், நண்பிகள், தோழர்கள், தோழிகள் அனைவரும் மதுரை விமான நிலையத்தில் இருக்கின்றனர். ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக இங்கிருந்து கொடைக்கானல் செல்கிறேன், நான் உங்களோடு கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு என் வேலையை பார்க்க சென்றுவிடுவேன், நீங்களும் உங்கள் வீட்டுக்கு செல்லுங்கள். தயவு செய்து யாரும் வாகனத்தில் என்னை பின்தொடராதீர்கள். உங்கள் அன்புக்கு நன்றிகள். லவ் யூ ஆல்" என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

அஜித் என்ன பேசினார்?

அஜித்துக்கு இந்த ஆண்டு உண்மையிலேயே சிறப்பான ஆண்டு தான். ஜிபியு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதே சூட்டோடு சென்று குடியரசு தலைவர் கையால் பத்மபூஷன் விருதைப்பெற்றிவிட்டு வந்திருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அஜித் குமாரிடம் “திரைத்துறையில் இருந்த  உங்கள் சக நண்பர்கள் அரசியலுக்கு வந்துள்ளது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது?

அதற்கு AK “எனக்கு அரசியலில் பெரிய ஆர்வம் கிடையாது, என்னுடைய சக நண்பர்கள் அரசியலில் இறங்கி இருக்கிறார்கள், அது அவர்களின் தனிப்பட்ட முடிவு. அவர்கள் நன்றாக வர வேண்டும், சமூகத்தில் அவர்களால் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்பினால் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

இது உண்மையிலேயே மிக மிக வரவேற்க தக்கது. அரசியலில் நுழைவதற்கு 100% நிச்சயம் ஒரு துணிச்சலான முடிவுதான்” என பேசியுள்ளார். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்