தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக 80-களில் வலம் வந்த சகோதரிகள் அம்பிகா மற்றும் ராதா. தற்போது இவர்களுக்கு இடையே பண மோசடி குறித்த மோதல் நிலவி வருகிறது. ரூ.46 கோடி அளவில் செக் மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா புகார் அளித்துள்ளார். பிரபல நடிகை ராதா காவல் ஆணையர் அலுவலகத்தில் அவருடைய சகோதரி நடிகை அம்பிகா மற்றும் அவருடைய சகோதரர் அர்ஜுன் ஆகியோர் மீது 46 கோடி அளவில் செக் மோசடி செய்துவிட்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
ராதா அவருடைய வீட்டில் வசித்துக் கொண்டிருக்கும் பொழுது அவருடைய சகோதரியும் ஒன்றாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது அவருடைய சகோதரி அம்பிகா மற்றும் அதே போன்று அவருடைய சகோதரர் ஆகிய இருவரும் ஒன்றாக சேர்ந்து சிறுக சிறுக ஐந்து செக்குகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளித்துள்ளார். ஒரு கட்டத்தில் வங்கி கணக்கை பரிசோதனை செய்த ராதா, தன்னுடைய ஐந்து செக்குகளில் இதுவரை 46 கோடி அளவில் பணம் மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நடிகை ராதா, சென்னை போரூரில் RR Gardens என்ற பெயரில் செய்து வரும் தொழில்களுக்கு தேவையான அவசர செலவிற்காக கையெழுத்திட்ட சில காலியான காசோலைகளை தனது அறையில் வைத்திருப்பது வழக்கம். 2025 ஆம் ஆண்டு நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதனால் ஐடிபிஐ வங்கியில் இருந்து புதிய செக் புக் வழங்கப்பட்டு பழைய செக் புக் பயன்பாட்டில் இல்லாமல் போனது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 17ந் தேதி அன்று ஐடிபிஐ வங்கியிலிருந்து ராதாவுக்கு வந்த குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம், பயன்பாட்டில் இல்லாத அவரது பழைய 5 காசோலைகள், அக்காஅம்பிகா நாயர் பெயரில் பணமாக்குவதற்காக வங்கியில் செலுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. வங்கியில் தாக்கல் செய்யப்பட்ட அந்த 5 காசோலையில் மொத்த மதிப்பு சுமார் ₹43.62 கோடி என்று தெரிந்ததும், வங்கியை தொடர்பு கொண்டு பண பரிவர்த்தனையை நிறுத்தியுள்ளார் தங்கை ராதா.
அதை தொடர்ந்து வங்கியில் விசாரித்த போது, அந்த பழைய காசோலைகளில் தொகையையும் பெயரையும் நிரப்பியது ராதாவின் சகோதரரான மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் என்பது தெரியவந்துள்ளது. இவர் மீது ஏற்கனவே ஃபெமா சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் ராதா தெரிவித்துள்ளார்.
வளசரவாக்கத்தில் உள்ள ராதாவின் வீட்டின் தரைதள பகுதியில் அக்கா அம்பிகா தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் ராதா இல்லாத நேரத்தில் அவரது அறைக்குள் புகுந்து, கையெழுத்திட்ட பழைய காசோலைகளை திருடி, அதை மோசடி முறையில் பணமாக்க முயன்றதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, தனது அறையில் வைக்கப்பட்டு இருந்த தங்கம், வைர நகைகள், சொத்து மற்றும் வங்கி ஆவணங்கள், பரிசுகள் உள்ளிட்டவற்றை தான் சரிபார்க்க விடாமல் அம்பிகாவும் சகோதரர் அர்ஜுன் நாயரும் சட்டவிரோதமாகத் தடுத்து வருவதாகவும் ராதா தனது மனுவில் தெரிவித்துள்ளார். தன் அனுமதியின்றி செக்குகளை திருடி, போலியாக நிரப்பி ஏமாற்ற முயன்ற சொந்த அக்கா அம்பிகா மற்றும் சகோதரர் அர்ஜுன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் ராதா முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளார். பிரபல நடிகை அம்பிகா மீது காவல் ஆணையரிடம் சொந்த தங்கை ராதா காசோலை மோசடி புகார் அளித்துள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்