

நடிகை அம்பிகா சமீபத்தில் யூடுப் சேனல் ஒன்றுக்கு கொடுத்த நேர்காணல் ஒன்றில் அரசியல் மற்றும் சினிமா குறித்த கேள்விகளுக்கு தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில் திரிஷா மற்றும் விஜய்யின் லண்டன் பயண சர்ச்சை குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் “தேவை இல்லாம இன்னொருத்தரை ஜட்ஜ் பண்ணாதீங்க, அது நம்ம வேல கிடையாது. அந்த பொண்ணு பாவங்க ஜோடி படத்தில் இருந்து எனக்கு த்ரிஷவை எனக்கு தெரியும். அவங்க நல்ல பொண்ணு. த்ரிஷா எங்கு உட்கார்ந்து சாப்பிட்டால் எனக்கு என்ன வந்தது?. என்றும் விமர்சனங்களுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அவர்களுக்குள் நட்பு மட்டுமே உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் திரிஷா அரசியல் வருகை குறித்து நெறியாளர் கேட்ட கேள்விக்கு, “திரிஷா அரசியலுக்கு வந்தால் என்ன? ஏன் சினிமாவில் இருந்து நிறைய பேர் வந்து இருக்கிறார்கள். ஏன் நான் கூட கட்சி ஆரம்பிக்கலாம் என நகைச்சுவையாக பேசினார். மேலும் அரசியலில் இளைஞர்களுக்கு சீனியர்கள் வாய்ப்பு கொடுத்து வழிவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானின் விமர்சனத்துக்கு “சினிமாவில் இருந்து வந்த சீமான்.. இப்படி விமர்சிப்பது கூடாது. நிறைய பேர் சினிமாவில் இருந்து வந்தவர்கள் தான்” என்றும் பதிலளித்துள்ளார்.
மேலும் வேறொரு நேர்காணலில் விஜய் மற்றும் திரிஷாவின் லண்டன் பயணம் குறித்து பேசியது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. அதில் “எனக்கு ஒரு நண்பர் இருந்து.. அவர் முக்கிய பொறுப்பில் இருந்தால்.. நான் அவர்களுடன் செல்வது நெகடிவ் ஆன feedback வரும் என்று தெரிந்திருந்தால்.. அந்த நட்பை மத்தித்து நான் அவர்களுடன் போக மாட்டேன்” என்றும் “நான் அந்த இடத்தில் இருந்தால்.. அவாய்ட் பண்ணுவேன்” என்றும் தெரிவித்தார். மேலும் அந்த நட்புக்கு மரியாதை கொடுத்து நாமும் ஜாக்கிரதையாக நடந்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து ஒரு நெகடிவ் கருத்து இருந்து வருகிறது என்றால் அதை தவிர்ப்பது நல்லது என்றும் குறிப்பிட்டார். மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் உரை மற்றும் எதிர்க்கட்சியின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்