India’s Got Latent Season 2 India’s Got Latent Season 2
பொழுதுபோக்கு

"பெண்கள் ஆண்களிடம் இருந்து பணத்தை எதிர்பார்க்கிறார்கள்.." 'டென்ஷனான ஆலியா பட்' - நெட்டிசன்களால் கொண்டாடப்படுவதன் பின்னணி!

"ஆண்களில் பெண்கள் எதை அதிகம் விரும்புகிறார்கள்?"

Vinvizhi Leninton

'இந்தியாஸ் காட் லேட்டன்ட் சீசன் 2', ஜூன் 20, 2026 அன்று நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யூடியூபில் வெளியானது. இந்த நிகழ்ச்சியை பாலிவுட் நடிகை ஆலியா பட் வெளியாகவிருக்கும் தனது 'ஆல்ஃபா' திரைப்படத்தை விளம்பரப்படுத்த உடன் நடித்த ஷர்வரியுடன் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார். இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க கிண்டல் செய்வதைப் பற்றியது என்பதால், சமய், ஆஷிஷ் சோலங்கி மற்றும் பல்ராஜ் காய் ஆகியோர் நடிகர்களை விளையாட்டுத்தனமாகக் கிண்டல் செய்ய, அவர்களும் பதிலுக்கு அவர்களைக் கிண்டல் செய்ய என்று நக்கல், நையாண்டியாக சென்றது.

இந்த நிகழ்ச்சியின் முந்தைய சர்ச்சைகளைத் தொடர்ந்து, தற்போது வெளியான இரண்டாம் சீசனின் முதல் எபிசோட் மிகவும் கண்ணியமாகவும், நகைச்சுவையாகவும் இருந்தது. இந்த நிகழ்ச்சியில் நடந்த உரையாடலின் போது, ​​சமய் ரெய்னா ஆலியா பட்டிடம், "ஆண்களில் பெண்கள் எதை அதிகம் விரும்புகிறார்கள்?" என்று கேட்டுள்ளார். அதற்கு ஆலியா பதிலளிக்கத் தயாரானபோது, ​​பார்வையாளர்களில் ஒருவர் "பணம்" என்று கத்தியுள்ளார். உடனடியாக முகம் மாறியபடி ஆலியா, " இதை யார் சொன்னது?" என்று கேட்டார். அதற்கு சமய் ரெய்னா, " ஏதோ ஏழையாக இருந்திருக்க வேண்டும்" என்றார்.

இந்த நிகழ்ச்சியில், பெண் வெறுப்பு கொண்ட நபரை அம்பலப்படுத்தியதற்காக ஆலியா பட்டை இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர். இதில் சில இணைய பயனர்கள் பிரணித் மோரையும் அவரது சமீபத்திய நகைச்சுவை நிகழ்ச்சியையும் விமர்சித்து, சமய் ரெய்னாவிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமாறு நக்கலாக கூறியுள்ளனர். ஏனெனில், அவர் தனது நிகழ்ச்சியில் ஒரு பெண்ணின் கண்ணியத்தை 370 ரூபாய் பிரியாணியுடன் ஒப்பிட்டு பேசியவரை ஊக்குவித்தற்காக மிகக் கடுமையான எதிர்வினையை சந்திக்க நேரிட்டது. தற்போது அதை எதிர்த்து இந்த நிகழ்ச்சியில் எதிர்வினை ஆற்றியது இணையவாசிகளை பாராட்டவைத்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்