Japanese Shoji design 
பொழுதுபோக்கு

"50 கோடிப்பே.." அனிருத் - காவ்யா மாறன் வரவேற்பு நிகழ்ச்சிக்கு இவ்வளவு செலவா? சிம்பிளான Backdrop-ல் ஒளிந்துள்ள 'ஜப்பானிய சிக்ரெட்'

இந்த பேக் டிராப் ஜப்பானிய புகழ் பெற்றதாக கூறப்படுகிறது. அதாவது இது, ஜப்பானிய 'ஷோஜி' டிசைன் என்று கூறப்படுகிறது.

Vinvizhi Leninton

சமீபத்தில் காவ்யா மாறன் - அனிருத் திருமணம் கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதனையடுத்து, 2 நாட்கள் சென்னையில் நடந்த அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் என்று பலரும் வருகை தந்தனர். இதில், இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட சிவப்பு நிற பேக் டிராப்-பானது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்த பேக் டிராப் ஜப்பானிய புகழ் பெற்றதாக கூறப்படுகிறது. அதாவது இது, ஜப்பானிய 'ஷோஜி' டிசைன் என்று கூறப்படுகிறது. ஜப்பானிய ஷோஜி டிசைன் என்பது, பின்னல் போன்ற மரச்சட்டத்தால் செய்யப்பட்ட, ஒளி ஊடுருவும் வெள்ளைக் காகிதத்தால் மூடப்பட்ட, நகரும் தடுப்புக் கதவுகள் மற்றும் ஜன்னல்களாகும். இந்த அமைப்பானது, ஜப்பானிய வீடுகள், கோயில்கள் மற்றும் அரண்மனைகளின் அறைகளையும், முகப்புகளையும் அலங்கரிப்பதாக கூறப்படுகிறது. இது ஜப்பானின் மிகப் பழைமையான கலைநாயமாகும். இதுமட்டுமின்றி, அந்த பேக் டிராப்-பில் 'இகெபானா' (Ikebana) என்ற ஜப்பானிய கலையும் இடம்பெற்றிருந்தது. இகெபானா என்பது ஜப்பானிய மலர்களை கொண்டு செய்யப்படும் பாரம்பரியமான அழகு கலை என்று கூறப்படுகிறது. அதாவது, அந்த பேக் டிராப்-பில் உள்ள சிவப்பு நிற மலர்கள் அமைந்துள்ள விதம்தான் இவ்வாறு கூறப்படுகிறது.

இந்த தோற்றமானது மினிமலிஸ்டாக இருப்பதால், இன்னும் கொஞ்சம் அழகை கூடுதலாகவே காட்டும். குறிப்பாக, ஆடம்பரமாக செலவு செய்து செய்யப்படும் பல திருமணங்களில் அதிக மலர்கள், கிரிஸ்டல்கள், விளக்குகள் உள்ளிட்ட கண்களை பறிக்கும் விதத்தில் பலவற்றை பயன்படுத்துவர். ஆனால், இந்த எளிமையான பேக் டிராப்-பானது அமைதியான, கலைநயம் கொண்டதாக மட்டுமின்றி இயற்கையின் அழகினையும் எடுத்து காட்டுகிறது. பொதுவாகவே, ஜப்பானியக் கட்டிடக்கலை பாரம்பரியமாகவே இயற்கை, எளிமை மற்றும் அமைதியான சூழலுக்கு முக்கியத்துவம் தருகிறது.

காவ்யா மாறன் - அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பயன்படுத்தபட்ட இந்த பேக் டிராப், சர்வதேச தரத்திலான பார்வையை தருவதோடு சிம்பிள் லுக்கையும் தருகிறது. பெரிதாக ஆடம்பரம் இல்லமால் சிம்பிள் லுக்-கில் கண்ணை கவரும் இந்த ஜப்பானிய ஷோஜி டிசைனைதான் இந்த புதுமண தம்பதிகள் தங்கள் திருமணத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த, ஷோஜி டிசைனானது தத்துவதுடனும் தொடர்புடையதாகவும் கூறப்படுகிறது. அதாவது, வாபி-சாபி (wabi-sabi) என்ற தத்துவத்துடன் நெருங்கிய தொடர்புடையதாக கூறப்படுகிறது. அது என்ன வாபி-சாபி (wabi-sabi) தத்துவம் என்றுதானே யோசிக்கிறீர்கள்?. 'வாபி' என்பது எளிமை, சாதாரணம், அடக்கம், குறைந்த பொருளாசையில் மகிழ்ச்சி கொள்வது. 'சாபி' என்பது, காலம், பயன்பாடு மற்றும் முதுமை கொண்டுவரும் அமைதியான அழகு என்று பொருள்படும். அதாவது, குறைபாடுகளிலும், எளிமையிலும், முழுமையற்ற தன்மையிலும் அழகைக் காண்பது என்பதைதான் இந்த வாபி-சாபி (wabi-sabi) தத்துவம் குறிக்கிறது.

காவ்யா மாறன் - அனிருத் தம்பதிகள் இந்த பேக் டிராப்-காக கிட்டத்தட்ட 50 கோடி செலவு செய்துள்ளதாக தகவல்கள் சொல்கின்றன. திருமணத்திற்கு 100 கோடிக்கு மேல் செலவு செய்ததாக கூறப்படும் நிலையில், இந்த திருமண வரவேற்பிற்கு கிட்டத்தட்ட 50 கோடி செலவு செய்ததாக திரைத்துறையில் கிசுகிசுக்கப்படுகிறது. தங்கள் திருமணம் முதல் வரவேற்பு நிகழ்ச்சி வரை அழகியலை மையமாகக் கொண்டு சர்வதேச தரத்தில் பக்காவான ஒரு திருமண ஏற்பாட்டினை இந்த தம்பதிகள் செய்திருப்பது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும், நுணுக்கங்களோடு அழகியல் மட்டுமின்றி, எளிமைக்கும் முன்னுரிமை கொடுத்து கிளசான திருமண வரவேற்பு நிகழ்ச்சியாக நடத்தியுள்ளனர்.

இப்போது புரிந்ததா..? அந்த பேக் டிராப்-பில் ஒளிந்துள்ள அந்த பாரம்பரிய ரகசியம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்