"FRAME-அ பாருங்க ஜி!" - அனிருத் - காவியா வரவேற்பில்.. TOP 10 VIP யார் யார்? முதல்வர்கள் முதல் சூப்பர் ஸ்டார்கள் வரை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி என பல பிரபலங்கள் ஒரே இடத்தில் சங்கமித்தது
"FRAME-அ பாருங்க ஜி!" - அனிருத் - காவியா வரவேற்பில்.. TOP 10 VIP யார் யார்? முதல்வர்கள் முதல் சூப்பர் ஸ்டார்கள் வரை!
Published on: 
Updated on: 
3 min read

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை செயல் அதிகாரி காவ்யா மாறன் திருமணம் கிரீஸ் நாட்டில், நெருக்கிய உறவினர்கள் முன்னிலையில் நவம்பர் 11 அன்று நடந்தது. அதைத்தொடர்ந்து, வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள பிரமாண்டமான 5 ஸ்டார் ஹோட்டல் ITC கிராண்ட் சோலாவில், கோலாகலமாக நடைபெற்றது. நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இந்த வரவேற்பு நிகழ்ச்சி பிளான் செய்யப்பட்டுள்ளது. முதல் நாள் அரசியல் மற்றும் தொழில்துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இரண்டாவது நாளில், இந்திய திரைதுறையினர்  மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் கலந்துகொண்டனர். 

அரசியல் தலைவர்கள் முதல் திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். குறிப்பாக, ஆகாஷ் அம்பானி, தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி என பல பிரபலங்கள் ஒரே இடத்தில் சங்கமித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட TOP 10 முக்கியப் பிரபலங்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

இந்த வரிசையில் முதல் இடத்தில் இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளார். நாட்டின் மிக உயரிய அரசியலமைப்புப் பொறுப்பில் இருக்கும் அவர் அனிருத் - காவ்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியது பெரும் கவனம் பெற்றது.

முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி

ரிலையன்ஸ் குழுமத்தின் முக்கிய நிர்வாகியும் தொழிலதிபருமான ஆகாஷ் அம்பானி தனது மனைவி ஷ்லோகா மேத்தாவுடன் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மணமக்களுடன் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சிகளும் வெளியாகி உள்ளது.

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்

தமிழக முதல்வர் விஜய் இந்தத் திருமண வரவேற்பில் கலந்துகொண்டது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது. மணமக்களை வாழ்த்திய அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஒரே இடத்தில் இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது.

தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி

தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டியும் இந்த நட்சத்திரத் திருமண வரவேற்பில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இவருக்கு கொடுத்த வரவேற்பு அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரல் ஆன பிற கே அனிருத் காவியா திருமணம் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொண்டது இந்த வரவேற்பின் முக்கிய அம்சமாக அமைந்தது.

கேரள முதல்வர் வி.டி. சதீசன்

கேரள முதல்வர் வி.டி. சதீசனும் அனிருத் - காவ்யா திருமண வரவேற்பில் கலந்துகொண்ட வாழ்த்தினார். CM சதீசன், ரஜினி மற்றும் ஸ்டாலின் உடன் வெளியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. தமிழகத்தைத் தாண்டி அண்டை மாநில அரசியல் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது கவனத்தைப் பெற்றது.

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். குறிப்பாக, முதல்வர் விஜய், ரஜினிகாந்த் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒரே இடத்தில் சந்தித்துக்கொண்ட புகைப்படம் அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளானது. மேலும் இவர் மணமகள் காவியாவின் நெருக்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. கீரிஸ் நாட்டில் நடந்த திருமணம் முதல் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்டுள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

அனிருத்தின் உறவினரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மணமக்களுடன் மேடையில் நின்று வாழ்த்தியதுடன், நடிகர் கமல்ஹாசனுடன் அவர் கலகலப்பாகப் பேசிக்கொண்ட காட்சிகளும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. மேலும் நேற்றைய நிகழ்ச்சியில் அனைத்து திரைபிரபலங்களுடன் வெளியான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. 

எம்.எஸ்.தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான எம்.எஸ்.தோனி தனது மனைவி சாக்ஷியுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தோனியின் வருகை கிரிக்கெட் ரசிகர்களிடையே தனி கவனத்தைப் பெற்றது. அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டன.

முத்தையா முரளிதரன்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரனும் இந்த நட்சத்திர வரவேற்பில் பங்கேற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் தனது சாதனைகளால் தனி முத்திரை பதித்த முரளிதரனின் வருகை விளையாட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக உள்ளார்.

நடிகர் அஜித்குமார்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாரும் அனிருத் - காவ்யா திருமண வரவேற்பில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அஜித் சந்தித்து அன்புடன் கட்டியணைத்துக்கொண்ட காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது.

அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் தொழில்துறை எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் ஒரே இடத்தில் சங்கமித்ததால் அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது என்றே சொல்லலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்