avatar 3 
பொழுதுபோக்கு

வெளியானது அவதார் ட்ரைலர் …! “வெறித்தனமான விஸ்வல்ஸ்… புதிய கதைக்களம்..” கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு ரெடியா..?!

பண்டோராவின் பசுமையான காடுகள் முதல் நீல நிற தோலைக் கொண்ட ந'வி மக்கள் வரை,...

Saleth stephi graph

பிரபல இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆண்டு வெளியானது அவதார் திரைப்படம். மிகப்பெரிய அளவில் உலகளாவிய வெற்றியையும் ரசிகர்களையும் இத்திரைப்படம் பெற்றது. பிரம்மாண்ட காட்சி அமைப்புகளுக்கு சொந்தக்காரரான ஜேம்ஸ் இத்திரைப்படத்தை மோஷன் கேப்ச்சரில் 3D தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கி நம்மை பிரம்மிக்க வைத்திருப்பர்.

பண்டோராவின் பசுமையான காடுகள் முதல் நீல நிற தோலைக் கொண்ட ந'வி மக்கள் வரை, அவதார் காட்சிகள் நவீன சினிமாவின் உண்மையான தலைசிறந்த படைப்பாகும்.

முதல் பாகம் வெற்றியடைந்தது தொடர்ந்து , அவதார் -2 (நீருக்கான வழி - way of water) வெளியாகி அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் அவதார் -3 (நெருப்பும்-சாம்பலும்) டிரைலர் வெளியாகியுள்ளது. எப்போதும் பண்டோரா மக்களை, மனிதர்கள் மட்டுமே தொல்லை செய்துவந்த நிலையில், இப்பொது பாகம் 3-ல் நெருப்போடு தொடர்புடைய மற்றொரு பழங்குடிகளை டிரைலரில் நம்மால் காண முடிகிறது. நாயகன் சல்லி இந்த பாகத்தில் புதிய பரிணாமம் எடுக்கலாம். கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாக உள்ள இப்படத்திற்கு பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.