பொழுதுபோக்கு

“ஜனநாயகன் படத்திற்கு தொடரும் சிக்கல்” - பின்னடைவை சந்தித்துள்ள வழக்கு.. 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட விசாரணை!

சான்றிதழ் வழங்குவதற்கு முன்பு எப்படி பட வெளியீட்டு தேதியை அறிவிக்க முடியும்...

Mahalakshmi Somasundaram

தமிழக அரசியல் களத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக் நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகள் தான். விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் தற்போது பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் ஜனவரி 9-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் இந்த படத்தின் தணிக்கை வாரிய வழக்கின் தீர்ப்பு 9 ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று காலை தனி நீதிபதி ஆஷா தலைமையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில் ஜனநாயகம் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்திருக்கிறது. மேலும் ‘ஐந்து பேர் கொண்ட தணிக்கை வாரிய குழுவில் உள்ள ஒரு உறுப்பினர் கருத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. படத்தை பார்த்து தணிக்கை சான்று கொடுத்த உடன் தணிக்கை குழுவின் தலைவருக்கான அதிகாரம் முடிந்துவிட்டது. பின்னர் மறு ஆய்விற்கு அனுப்பும் அதிகாரம் தணிக்கை வாரிய குழுவிற்கு இல்லை’ என தெரிவித்தார்.

இதனை ஏற்க மறுத்து தணிக்கை வாரிய குழு தலைமை நீதிபதிகளிடம் மேல்முறையீடு செய்த நிலையில் மனு அளித்தால் இந்த வழக்கு விசாரிக்காடும் என தலைமை நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே தனி நீதிபதி ஆஷா வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரிய குழு மனு அளித்த நிலையில் அதனை அவசர வழக்காக விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் படக்குழுவினர் மற்றும் தணிக்கை வாரியத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

தணிக்கை வாரிய குழுவிடம் தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பை உடனே மேல்முறையீடு செய்யவேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தணிக்கை வாரியம் ‘ஜனநாயகன் விவகாரத்தில் பதில் மனு அளிக்க போதிய கால அவகாசம் கொடுக்கப்பட வில்லை, அதற்குள் தணிக்கை சான்றிதழ் வழங்க தனிநீதிபதி உதவிட்டார்’ என தெரிவித்துள்ளனர். மேலும் டிசம்பர் 22 ஆம் தேதியே தணிக்கை வாரியத்தின் முடிவு தெரிவிக்கப்பட்ட நிலையில் படக்குழு தாமதாக வழக்கு தொடர வேண்டிய அவசியம் என்ன என கூறியுள்ளனர்.

மேலும் படக்குழுவினரிடம் தலைமை நீதிபதிகள் தணிக்கை சான்றிதழ் வழங்குவதற்கு முன்பு எப்படி பட வெளியீட்டு தேதியை அறிவிக்க முடியும்? நீங்கள் தேதியை அறிவித்து விட்டு நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியாது என கேள்வி எழுப்பினர். அது மட்டுமல்லாமல் பல்வேறு நடவடிக்கைகள் இருக்கும்  போது  தணிக்கை சான்றிதழுக்கு காத்திருக்கத்தான் வேண்டும் என தெரிவித்து. வழக்கின் விசாரணையை ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.