பொழுதுபோக்கு

ராஜமௌளி படத்தில் மகேஷ் பாபுவுடன் ‘தோர்’ நடிக்கிறாரா?

பிரபல ஹாலிவுட் நடிகர் க்ரிஸ் ஹெம்ஸ்வர்த், எஸ்.எஸ் ராஜமௌளியின் அடுத்த படத்தில் சிறப்பு நாயகனாக நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Malaimurasu Seithigal TV

ஆர்.ஆர்.ஆர் என்ற மாபெரும் வெற்றி பெற்ற பான் இந்தியா படத்தைத் தொடர்ந்து, பல படங்களை தனது கையில் வைத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌளி. அதில், முதலாவதாக தயாரக இருப்பது மகேஷ் பாபு நடிக்க இருக்கும் SSMB 29. அதாவது, எஸ்.எஸ். ராஜமௌளி மற்றும் மகேஷ் பாபு இணையும் 29வது படம்.

இதற்கு, பிரபல ஹாலிவுட் கேஸ்டிங் ஏஜன்சியான ‘CAA’ உடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார் அவர். ஆர்.ஆர்.ஆர் படம் உலக திரைப்படங்களுக்கான கௌரவ விருதான ‘ஆஸ்கார்’க்கு அனுமதி பெற்ற நிலையில், கண்டிப்பாக பல விருதுகளை அந்த படம் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஏற்கனவே எஸ்.எஸ். ராஜமௌளி படத்திற்கான எதிர்பார்ப்பு உலக மக்கள் மத்தியில் உருவாகியிருக்கும் பட்சத்தில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் செயல்பட்டு வரும் ஹாலிவுட் நடிகர்கள் வார்ப்பு நிறுவனம், அதாவது கேஸ்டிங் ஏஜன்சியான ‘CAA’ உடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார் எஸ்.எஸ். ராஜமௌளி.

இதனைத் தொடர்ந்து, மகேஷ் பாபு நடிக்க இருக்கும் இந்த SSMB 29 படத்தில், மகேஷ் பாபுவுடன் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில், ‘தோர்’ புகழ் க்ரிஸ் ஹெம்ஸ்வர்த் நடிக்க கேட்டிருப்பதாக தகவல்கள் திரையுலக வட்டாரத்தில் பரவி வருகிறது. ஆனால், அதற்கு க்ரிஸ் ஒப்புக் கொண்டாரா என்ற அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட்டில், பல சூப்பர் ஹீரோ படங்கள் வந்தாலும், ‘மார்வெல்’ ஸ்டூடியோசின் மிகவும் சிறப்பு வாய்ந்த, உலகளவில் மாபெரும் கலெக்‌ஷன் பெற்ற படம் எதுவென்றால் அது, ‘ஆவெஞ்சர்ஸ் எண்ட்-கேம்’ தான். அந்த படத்தின்ப் தொடர்ச்சி கதாபாத்திரமாக ‘நார்மென்’ புராண கதைகளில், இந்திர தேவனாக இடி மின்னல்களின் கடவுள் ‘தோர்’ கதாபாத்திரத்தில் தான் க்ரிஸ் ஹெம்ஸ்வர்த் நடித்திருப்பார். சமீபத்தில் கூட, ‘லவ் அண்ட் தண்டர்’ என்ற படம் வெளியாகி நல்ல வசூல் பெற்ற நிலையில், இந்திய படத்தில் க்ரிஸ் ஹெம்ஸ்வர்த் எப்படி நடிக்க போகிறார் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

அது மட்டுமின்றி, கண்டிப்பாக இந்த படத்தில் நடிக்க க்ரிஸ் ஹெம்ஸ்வர்த் ஒப்புக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏன் என்றால், அவருக்கு இந்தியா மிகவும் பிடித்த நாடு என்று பல முறை நேர்காணல்களில் கூறியிருப்பதை அடுத்து, தனது மகளின் பெயரைக் கூட, “இந்தியா ரோஸ் ஹெம்ஸ்வர்த்” என வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்திய படம் அதுவும், உலக அளவில் வெற்றிக் கண்ட ஆர்.ஆர்.ஆர் படத்தின் இயக்குனரான எஸ்.எஸ். ராஜமௌளி இயக்கத்தில் வரும் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.