OM Chapter 1 Uthiram 
பொழுதுபோக்கு

தனுஷின் 'ஓம்' இசை வெளியீட்டு விழா.. கட்டுக்கடங்காத ரசிகர்கள் அலை! கூட்டநெரிசலால் திக்குமுக்காடிய கல்லூரி வளாகம்!

'ஓம் – அத்தியாயம் 1: உத்திரம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, ​​கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vinvizhi Leninton

சென்னையின் மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில், நடிகர் தனுஷின் அடுத்து வரவிருக்கும் திரைப்படமான 'ஓம் – அத்தியாயம் 1: உத்திரம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, ​​கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் தனுஷின் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சாய் அபியங்கர் இசையில் நவம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ளது திரைப்படம்தான் 'ஓம் – அத்தியாயம் 1: உத்திரம்'. இதில், தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட திரைபட்டாளங்கள் நடித்துள்ளன. இந்தப் படம் முதலில் அக்டோபர் 16 அன்று வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ரஜினிகாந்தின் ' ஜெயிலர் 2' மற்றும் சூர்யாவின் தீபாவளி வெளியீடான ' சீன்' ஆகிய படங்களுடன் வசூல் மோதலைத் தவிர்க்கவே இந்த திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது, இந்த திரைப்படத்திற்கான இசை வெளியிட்டு விழாவானது இன்று (நவ 6) சென்னையின் மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த இசைவெளியீட்டு விழாவிற்கு 3000 பேருக்கு அனுமதியளித்துள்ளதாகவும் ஆனால், விழாவிற்கு நினைத்ததை விட அதிகபடியான ரசிகர்கள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருகிறார் என்ற சலசலப்பு இருந்துவரும் நிலையில், இந்த இசை வெளியீட்டு விழாவிலும் அவர் அரசியல் குறித்து பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த இசைவெளியீட்டு விழாவிற்கு 3000 பேருக்கு அனுமதியளித்திருத்த நிலையில் கல்லூரி வளாகத்தில் நினைத்ததை விட அதிகப்படியான ரசிகர்கள் குவிந்துள்ளனர். இதனால், அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 5000 முதல் 6000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 10,000 பேர் வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், பாஸ் இருந்தும் ரசிகர்களை உள்ளே விடாததாலும் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நினைத்ததைவிட அதிகப்படியான ரசிகர்கள் கூடியதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.