சமீபத்தில் திரையுலக வட்டாரங்களின் விவாகரத்து போக்கு அதிகரித்த வண்ணமே உள்ளது. சமீபத்தில் தனுஷ் தொடங்கி விஜய்யில் இருந்து நேற்று ஹன்சிகா வரை இது நீண்டுள்ளது. இந்த விவாகரத்து செய்தி குறித்து விரிவாக பார்க்கலாம்.
தனுஷ் : 2002-ம் ஆண்டு துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் நடிகர் தனுஷ். அதன் பின்பு காதல் கொண்டேன், பொல்லாதவன், ஆடுகளம், விஐபி போன்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். 2004-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து, நவம்பர் 18 தேதி 2004-ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் கரம் பிடித்தார். 18 வருடங்களாக இணைந்து திருமண வாழ்வில் இருந்த இவர்கள் 2024-ம் ஆண்டு திருமண வாழ்வை முடிவிற்கு கொண்டு வந்தனர். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதிகளின் திருமண வாழ்க்கையை 2024 நவம்பர் 27 அன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் முடிவுக்குக் கொண்டு வந்தனர். இருவரும் தீர்க்க முடியாத பிரச்சினைகள் காரணமாக பிரிந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனால் இவர்களுடைய திருமண வாழ்க்கை சுமூகமாக பிரிந்தது.
ரவி மோகன்: தமிழ் சினிமாவின் அழகிய ஜோடிகளாக வலம் வந்தவர்கள் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி. பல நேர்காணல்களில் இவர்களுடைய காதல் வாழ்க்கை தங்களுக்கும் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆர்ப்பரித்து இவர்களுடைய காதலை கொண்டாடி வந்தனர். இவர்களும் தங்களது 15 ஆண்டு கால திருமண வாழ்க்கையை 2024-ல் தாங்கள் பிரியப்போவதாக அறிவித்தனர். இதில் ரவி மோகன், ஆர்த்தி மீது அடுக்கடுக்காக பல குற்றசாட்டுகளை முன்வைத்தார். அதாவது, 18 ஆண்டுகள் தொடர்ச்சியான உடல், மனம், உணர்ச்சி மற்றும் நிதி என்று பல வகைகளில் சிக்கல்களை அனுபவித்ததாகவும், அவரது மௌனம் பலனின்றி போனதாகவும் உருக்கமாக தெரிவித்தார். மேலும், ஆர்த்தி மற்றும் அவரது குடும்பம் தன்னை சுரண்டியதாகவும், மகன்களை பார்க்கவிடாமல் தடுத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். "பிரிவது ஆர்த்தியை மட்டும்தானே தவிர்த்து எனது குழந்தைகளை அல்ல" என்றும் அவர் கூறியிருந்தார். அதன்பின்பு ரவி மோகனுக்கு, பாடகி கெனிஷாவுடன் தொடர்பு இருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. பாடகி கெனிஷாவும், ஆர்த்தியும் தங்களது சமூக வலைதளப் பக்கமான இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் ஒருவரை ஒருவர் குற்றம் சட்டி சண்டையும் இட்டுக்கொண்டனர். இதனையடுத்து கெனிஷா தரப்பில் "நான் ரவி மோகனுக்கு ஒரு தெரபிஸ்ட் மட்டுமே" என்றும், "அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் எனது உதவியை நாடிவந்திருந்தார்" எனவும் அவர் கூறியிருந்தார். அதன் பின்பு சேர்ந்து வாழ இயலாது எனக்கூறி நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இவர்களது விவாகரத்து தற்போது வரை நீண்டு கொண்டே செல்கிறது. இதனிடையில் பாடகி கெனிஷாவுடன் திருமண நிகழ்வுகளுக்கு ஒரே மாதிரி ஆடை அணிந்து வருவது போன்ற செயல்கள் பெரும் பேசுபொருளானது. மேலும் ரவி மோகன் கடந்த மார்ச் 11ம் தேதி தனது சமூக வலைதளபக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டு "நான் எனது வாழ்க்கையை அமைதியாக உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். ஆண்கள்தான் திருமண வாழ்க்கையில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள், ஒருநாள் உங்களுக்கும் இது புரியவரும்" என்று அதில் பதிவிட்டிருந்தார்.
ஜி.வி. பிரகாஷ், இசை உலகத்தை கலக்கி வந்த இசை காதலர்களான ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதியினர் பள்ளிக்காலங்களில் இருந்தே நீண்ட கால நண்பர்களாக இருந்து பின்பு காதலர்களாக வலம் வந்தனர். இதன் பின்பு திருமணம் செய்துகொண்டனர். தங்களது 11 ஆண்டு கால திருமண வாழ்வை முடிவிற்கு கொண்டு வருவதாக அறிவித்தனர். இவர்கள் இருவரும் "மனதளவிலான அமைதி மற்றும் இருவரின் நலனுக்காகவும் பிரிவதாக முடிவு மேலும் பரஸ்பர மரியாதை தொடரும், தனியுரிமை மதிக்கபடும்" என்ற அறிக்கையை வெளியிட்டனர். விவாகரத்திற்கு பின்பும் கூட இருவரும் இசை நிகழ்ச்சிகளில் பங்குபெற்றது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று விரும்புவதாக இசை பிரியர்கள் தெரிவித்தனர்.
விஜய், நடிகரும், தவெக தலைவருமான விஜயை பிரிவதாக அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தை நாடியிருந்தார். சமீபத்தில் இது மிக பெரிய பேசுபொருளாக மாறியது. நடிகர் விஜய்க்கு வேறு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய தொடர்பு இருப்பதாகவும், இதனால் சங்கீதாவும் அவரது குழந்தைகளும் மனதளவில் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். இதனடையடுத்து, வழக்கு முடியும் வரை விஜய் என்னை அவரது வீட்டில் இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கையை முன்வைத்திருந்தார். தங்களது 27 வருட திருமண வாழ்வை, விஜயின் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையை கருத்தில் கொண்டு அமைதியான முறையில் பிரிய பலமுறை பேச முயற்சித்தேன். ஆனால் அது கைகூடவில்லை என்றும் சங்கீதா தெரிவித்திருந்தார். இது விஜயின் அரசியல் வாழ்க்கையை பாதிக்கலாம் என்று பலரும் கருத்துக்களை தெரிவிகின்றனர்.
ஹன்சிகா, சினிமா உலகத்தின் கனவு நாயகியாக வலம் வந்தவர்தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவருக்கும் வணிகராக சோஹெல் கதூரியாவுக்கும் 12.4 கோடி செலவில் ஜெய்ப்பூர் அரண்மையில் டிசம்பர் 4, 2022ம் ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது. இதை "லவ் ஷாதி டிராமா" என்ற பெயரில் திருமண ஆவணப்படமாக ஹாட்ஸ்டார் வெளியிட்டது. இதனிடையில், திருமணமான கொஞ்ச நாளிலேயே இருவரும் பிரிந்து வாழ துவங்கினர். மேலும் ஹன்சிகா தங்களது திருமணம் குறித்த புகைப்படங்களை நீக்கியதோடு, சமூக வலைதளத்தில் சோஹெலை பின்தொடர்வதையும் நிறுத்தினர். இவர்கள் விவாகரத்து பெற்றுவிடுவார்கள் என்ற கிசுகிசுக்கள் காட்டு தீ போல சினிமா வட்டாரங்களில் பரவியது. அதன் பின்பு 4 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு மும்பை பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றத்தில் இருவருக்கும் மார்ச் 11ம் தேதி விவாகரத்து வழங்கப்பட்டது. மேலும்,ஹன்சிகா தனக்கு அலிமெனி எதுவும் வேண்டாம் விவாகரத்து மட்டும் போதும் என்று கூறியிருந்தார். முதலில் கூட்டு குடும்பமாக வாழ்ந்த இவர்கள் தொடர்ச்சியான பிரச்சனைகள் வந்ததன் காரணமாக தனிக் குடித்தனம் சென்றதாகவும் அங்கும் மனக்கசப்பு தொடர்ந்ததாலேயே இருவரும் விவாகரத்து பெற்றதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர்.
இந்த விவாகரத்திற்கு காரணமாக பெரும்பாலானோர் கூறுவது, மனஅழுத்தம், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை, மன அமைதி வேண்டி போன்ற காரணங்களுக்காகவே தாங்கள் பிரிவதாக தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கின்றனர். சமீப காலமாகவே திரையுலக பிரபலங்களிடையே மனக்கசப்பு, குடும்ப பிரச்சனைகள் காரணமாக விவாகரத்துகள் தொடர்ந்த வண்ணமே இருப்பதால் இது அவர்களின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.