தேர்தல் நெருங்க உள்ள நிலையில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்யின் மனைவி விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் விஜய்க்கும் இலங்கையை சேர்ந்த தொழிலதிபரின் மகள் அவரது மனைவி சங்கீதாவிற்கு கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் ஆம் தேதி மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் “விஜய்க்கு நடிகையுடன் திருமணத்திற்கு மீறிய உறவு இருப்பதை கடந்த 2021 ஆம் ஆண்டு தனக்கு தெரியவந்தது எனவும் இதனை தொடர்ந்து இது குறித்து அவரிடம் கேட்டபோது தன்னை வார்த்தைகளால் மிகவும் காயப்படுத்தியதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் அதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் இது குறித்து நான் எனது வழக்கறிஞர்கள் மூலம் விஜய்யிடம் பேசிய போது அவர் நடிகையுடனான திருமணத்திற்கு மீறிய உறவை கைவிடுவதாக உறுதியளித்தார்.
பின்னரும் அந்த உறவை கைவிடாத விஜய் என்னை ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்து அந்த நடிகையுடன் பழகி வந்தது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து நான் அவரது திருமணத்திற்கு மீறிய உறவு குறித்து கேட்டதால் பொருளாதார ரீதியாக எனக்கு பல கட்டுபாடுகளை விதித்தார். எனது குழந்தைகளின் படிப்பு மட்டும் மன நிம்மதியை கருத்தில் கொண்டு நான் எனது விவாகரத்து முடிவை தள்ளிவைத்திருதேன். ஆனால் இதற்கிடையில் விஜய் அந்த நடிகையுடன் வெளிநாடுகளுக்கு செல்வதும், இருவரும் ஒன்றிணைந்து எடுத்த புகைப்படங்களை நடிகை வெளியிட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததும் எனக்கும் என் குழந்தைகளும் அவமானத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே நீதிமன்றம் நாடி உள்ளேன்” என அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது சங்கீதா மீண்டும் விஜய் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டை வைத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கீதாவையும் அவரது குழந்தைகளையும் கவனித்து கொள்ளாத விஜய் சங்கீதாவை தனது நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். மேலும் அந்த வீட்டில் தனக்கும் உரிமை உள்ள நிலையில் அந்த வீட்டிற்கு செல்ல நீதிமன்றம் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என புதிய மனுவை தாக்கல் செய்திருக்கிறார். மேலும் தனது குழந்தைகளை விஜய் கவனிப்பதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.