ஞாயிற்று கிழமைகளில் அதிகம் மக்களால் விரும்பப்பட்ட பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று 'விவாத நிகழ்ச்சிகள்' அதிலும் ஒவ்வொரு வாரமும் பொவ்வொரு தலைப்பு என்று விவாத நிகழ்ச்சி மிக சுவாரஸ்யமாக செல்லும். அந்த வகையில் நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பான விவாதமானது தற்போது பேசுபொருளான மாறியுள்ளது. அதாவது "பெண் சுதந்திரம் சரியான பாதையில் செல்கிறதா? ஆம்/இல்லை" என்ற தலைப்பில் பேசப்பட்டது, சர்ச்சைக்குரிய ஒன்றாக இன்ஸ்டாகிராமில் பார்க்கப்படும் சப்ஸ்கிரிப்ஷன் பக்கம் திரும்பியது. அதுதான் இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
நேற்றைய தினம் (நவ 22) தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு விவாத நிகழ்ச்சியில் பெண் சுதந்திரம் குறித்து விவாதம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சமூகவலைத்தளத்தில் "skill-ஐ காட்டுவது தவறில்லை.. skin-ஐ காட்டுவது தவறு" என்று எதிர் தரப்பினரில் ஒருவர் பேச இதிலிருந்து ஒரு விவாதம் பிறந்தது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'சப்ஸ்கிரிப்ஷன்' என்ற ஒன்றுதான் இன்று மிகப்பெரிய பேசுபொருளாக உள்ளது. குறிப்பாக, இந்த சப்ஸ்கிரிப்ஷன் என்பது பணம் கட்டுபவர்களுக்கென்று பிரத்தேயகமாக சில வீடியோக்கள் வெளியிடப்படும். இது கொண்டுவந்ததற்கு காரணம், "தங்களது அசாதாரணமான திறமைகளை அல்லது தங்களுக்கு மட்டுமே தெரிந்த சில விஷயங்களை மற்றவர்களுக்கு சொல்லி தரும் பொருட்டு இன்ஸ்டாகிராமில் பிரத்தேயகமாக பணம் கட்டி பார்த்துக்கொள்ளலாம்" என்பதுதான் இதன் நோக்கம்.
ஆனால், காலப்போக்கில் இதன் நோக்கம் மாறி வேறுவிதமாக செல்லத்தொடங்கியது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், ஆபாசமா வீடியோக்களை அதில் பதிவிட்டு பணம் சம்பாதிக்க தொடங்கினர். முதலில் இந்த சப்ஸ்கிரிப்ஷன் தளத்தில் இதுபோன்ற செயல்களில் நடிகைகள் ஈடுபட தொடங்கினர். நாளடைவில், இன்ஸ்டாகிராமில் செலபிரிட்டிக்களாக வலம் வரும் பெண்கள் இதில் கால்பதித்தனர். தற்போது, பாகுபாடின்றி பலரும் இந்த சப்ஸ்கிரிப்ஷன் தளத்தினை அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ளனர். குறிப்பாக இந்த தளத்தினை அவர்கள் பணம் ஈட்டித்தரும் ஒரு கருவியாக பார்த்துவருகின்றனர். அந்த விதத்தில் நந்திதா, தர்ஷா குப்தா உள்ளிட்ட பல நடிகைகளும் இதில் உள்ளனர்.
இது சமூகத்தில் சீரழிவினை கொண்டுவரும் என்று பலராலும் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த குறிப்பிட்ட வார்த்தைதான் அந்த விவாத நிகழ்ச்சியில் விவாதத்திற்குரிய பொருளாக மாறியது. அதில் எதிரணியில் இருக்கும் ஒருவர், " சமூக வலைதளத்தில் skill-ஐ காட்டுவது தவறில்லை.. skin-ஐ காட்டுவது தவறு" என்று நாசூக்காக சொல்ல, நிகழ்ச்சி தொகுப்பாளர் அதனை போட்டுடைப்பதுபோல் 'சப்ஸ்கிரிப்ஷன்' என்று கூறி இதை ஆதரிக்கிறீர்களா? உங்களது பார்வை என்ன? என்று பெண் சுதந்திரம் தலைப்பிற்கு ஆதரவாக பேசிவந்த பெண்களிடம் தன் கேள்வியினை முன்வைத்தார்.
அதில் அமர்ந்திருந்த ஒரு பெண் இது குறித்து தனது பார்வையை கூறியதோடு "இதனை தான் ஊக்குவிப்பது இல்லை" என்று தெரிவித்தார். தொகுப்பாளர் அதே கேள்வியை அதே பக்கத்தில் இருந்த மற்றொரு பெண்ணிடம் கேட்க அதுதான் தற்போது சமூகவலைத்தளத்தில் சூடு பறக்கும் விவாதமாக மாறியது. தனது பதிலாக அந்த பெண், "சப்ஸ்கிரிப்ஷன் செய்வதே ஆண்கள்தான்.
அது ஒரு பிசினஸ்தான். தான் ஒரு கிராப் டாப் போடுவதோ அல்லது கவர்ச்சியாக காண்பிப்பதோ தன்னுடைய விருப்பம். அதற்கு அவர்கள் பணம் செலவழிக்கிறார்கள் என்றால் அவர்களுடைய பணத்தைத்தான் செலவழிக்கிறார்கள். தான் இதுபோல வீடியோக்களை பதிவிடுவது உங்களை பதிக்கிறாதா?. என்னுடைய மகிழ்ச்சியை நீங்கள் யார் வேண்டாமென்று கூறுவதற்கு?. அதிலிருந்து வரும் பணத்தினை நான் பயன்படுத்திக்கொண்டால் என்ன பிரச்சனை?. அதனால், தான் அந்த சப்ஸ்கிரிப்ஷனை ஆதரிப்பதாகவும், அது யாரையும் புண்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், தான் ஒரு உடையணிந்து அதிலிருந்து பணம் வருகிறது என்றால் அதில் என்ன தீங்கிருக்கிறது? என்று அந்த பெண் விவாதமேடையில் பேசியது. சமூகவலைத்தளத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகவும், விவாதப்பொருளாகவும் மாறியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.