Jailer 2 box office collection 
பொழுதுபோக்கு

மழையால் கூட தடுக்க முடியாத "ஜெயிலர் 2"-வின் அசுர வெற்றி.. சிக்கலில் தீபாவளி ரிலீஸ் படங்கள் - பெரும் குழப்பத்தில் தியேட்டர் ஓனர்கள்!

தீபாவளிக்கு 'ஜெயிலர் 2' திரைப்படத்தினை எடுத்துவிட்டு புதுப்படங்களை ஓட்டலாமா? அது சரிதானா? என்ற குழப்பத்தில் தியேட்டர் ஓனர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Vinvizhi Leninton

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியாகி சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் 'ஜெயிலர் 2'. ஏற்கனவே 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது 'ஜெயிலர் 2' படுஜோராக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, உலகளவில் 'பாக்ஸ் ஆபீஸ்' கலெக்ஷனாக ரூ. 582.45 கோடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. மேலும், விரைவில் ரூ. 1000 கோடியை தொடும் எனவும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வரை 'ஜெயிலர் 2' திரைப்படம்தான் 'டாப்' சீட்டில் இடம்பிடித்து வைத்திருக்கிறது. அந்த வரிசையில் தீபாவளி பண்டிகை வரவிருக்கின்ற நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வரிசைகட்டி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றன. ஆனால், சூப்பர் ஸ்டார், நெல்சன் மற்றும் அனிருத் கூட்டணியில் வெளியான இந்த 'ஜெயிலர் 2' திரைப்படம் 'தீபாவளியை தாண்டி ஓடும்போல..' என்று சொல்லும் அளவிற்கு அசுர வேகத்தில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. மேலும், இந்த தீபாவளிக்கு 'ஜெயிலர் 2' திரைப்படத்தினை எடுத்துவிட்டு புதுப்படங்களை ஓட்டலாமா? அது சரிதானா? என்ற குழப்பத்தில் தியேட்டர் ஓனர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தீபாவளி நவம்பர் 8-ம் தேதி வரவிருக்கும் நிலையில், அந்த வாரத்தில் அடுத்தடுத்து வரிசைக்கட்டி, சூர்யா மற்றும் நஸிரியா நடிப்பில் வெளியாகவுள்ள 'சீன்' திரைப்படம், அடுத்து நயன்தாரா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகவுள்ள 'மூக்குத்தி அம்மன் 2 (மகா சக்தி)' திரைப்படம் ஆகியவை நவம்பர் 6-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்திய அளவில் பெரிய பட்ஜெட்டில் ரன்பீர் கபூர், சாய்பல்லவி, யஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகவுள்ள 'ராமாயணம்', பிரபு தேவாவின் 'மூன்வாக்', விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' ஆகிய திரைப்படங்கள் இந்த தீபாவளிக்காக லிஸ்டில் காத்திருக்கும் திரைப்படங்கள்.

இந்த முறை கொஞ்சம் அதிகமாகவே மழை பொழிவு இருக்கும் என்று கூறப்பட்ட நிலையிலும் சரி, மழை பொழிவு இயல்பு வாழ்க்கையை பாதித்தபோதும் சரி, சூப்பர் ஸ்டாரின் திரைப்படத்தை பார்க்க கூட்டம் அலைமோதத்தான் செய்தது. 'எந்திரன்' திரைப்படத்தில், "என்ன யாரலையும் அழிக்கமுடியாது' என்று தலைவர் கூறி இருப்பார். இப்போது அந்த 'டெம்ப்ளேட்' அவருக்கே கனகச்சிதமாக பொருந்தியுள்ளது.

இப்படியாக வரிசைகட்டி "நான்.. நீ.." என்று போட்டிபோட்டு திரைப்படங்கள் இருந்தாலும், சூப்பர் ஸ்டாரின் 'ஜெயிலர் 2' திரைப்படம் தீபாவளி காலகட்டத்தில் கூட தமிழகம் முழுவதும் கணிசமான திரையரங்குகளைத் தொடர்ந்து தக்கவைத்து வருவதால், பாக்ஸ் ஆபிஸ் போட்டி என்பது இந்த முறை கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காரணத்தால் திரையரங்க உரிமையாளர்கள் 'பயங்கர' குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஒருவேளை, சில திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாறக்கூட வாய்ப்பிருக்குமா? அல்லது அந்த திரைப்படங்கள் சிக்கலை சந்திக்குமா? போன்ற பல கேள்விகளோடு இந்த தீபாவளி வரை காத்திருக்கலாம் வாங்க.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.