தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக.. “சட்டை கிழியாமல் 500+ கோடி” – "பாக்ஸ் ஆபீஸின் பேரரசன்" - ஜெயிலர் 2 செய்த சாதனை!

இதே வேகத்தில் வசூல் தொடர்ந்தால், விரைவில் ‘ஜெயிலர்’ முதல் பாகத்தின் வாழ்நாள் வசூலான ரூ.604.74 கோடியைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Jailer 2 Box Office Collection: Allu Arjun Praises Rajinikanth’s ₹549 Crore Record
Jailer 2: தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக.. "சட்டை கிழியாமல் 500+ கோடி" பாக்ஸ் ஆபீஸின் பேரரசன்! - திரும்பி பார்க்கும் திரையுலகம்
Published on: 
Updated on: 
2 min read

ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 15ஆம் தேதி வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வசூல் சாதனைகளைக் குவித்து வருகிறது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே வெளியான முதல் வாரத்தில் ரூ.549 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த பெருமையைப் பெற்றுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தத் திரைப்படத்தின் வசூலைக் குறிப்பிடும் போஸ்டரில், ‘பாக்ஸ் ஆபீஸின் பேரரசன்’ என ரஜினிகாந்துக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர். ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் வசூல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

புஷ்பா போன்ற பான் இந்தியா படங்களில் நடித்துள்ள அல்லு அர்ஜுன், ரஜினியின் வெற்றியை வியந்து பாராட்டியுள்ளார்.

அவரது பதிவில், "ரஜினிகாந்த் சாரின் நட்சத்திர அந்தஸ்து, ஸ்டைல் மற்றும் வசீகரத்தின் உண்மையான எடுத்துக்காட்டு! அட்ரினலினை அள்ளித் தெளிக்கும் ஒரு கமர்ஷியல் என்டர்டெய்னர்!

அல்லு அர்ஜூன்
அல்லு அர்ஜூன்

சகோதரா... அனிருத் கலக்கிவிட்டார்! அனைத்துக் கலைஞர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும், தயாரிப்பாளரும் இந்தப் படத்திற்காகத் தங்கள் இதயத்தையே கொட்டியுள்ளனர்.

ஷோமேன் நெல்சன் அவர்கள் ஒரு அட்டகாசமான ஹிட்டை வழங்கியுள்ளார்!" எனப் படக்குழுவினரைப் பாராட்டினார்.

அத்துடன், "சட்டை கிழியாமல் 500 CR+ அடிக்க ரஜினி சாரால் மட்டுமே முடியும்!" என்றும் வியந்துள்ளார்.

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்கரவர்த்தி, சுராஜ் வெஞ்சாரமூடு, வித்யா பாலன், யோகி பாபு, மிர்னா மேனன், ரித்விக், நமோ நாராயணா ஆகியோர் நடித்துள்ளனர்.

மோகன்லால், சிவராஜ்குமார், விஜய் சேதுபதி, ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். இது அந்தந்த மாநிலங்களிலும் படத்தின் மீதான கவனத்தை அதிகரித்துள்ளது.

‘துரந்தர் 2’, ‘த்ரிஷ்யம் 3’ படங்களைத் தொடர்ந்து, இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த மூன்றாவது இந்தியத் திரைப்படமாகவும், அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமாகவும் ‘ஜெயிலர் 2’ உருவெடுத்துள்ளது.

முதல் வார இறுதியைக் கடந்தும், விடுமுறை நாட்களைக் கடந்தும் தொடர்ந்து ரசிகர்களைத் திரையரங்குகளுக்கு ஈர்த்து வருகிறார் ரஜினிகாந்த். இதே வேகத்தில் வசூல் தொடர்ந்தால், விரைவில் ‘ஜெயிலர்’ முதல் பாகத்தின் வாழ்நாள் வசூலான ரூ.604.74 கோடியைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் ரூ.100 கோடி, ரூ.500 கோடி வசூலைக் கடந்த படங்களைக் கொடுத்தவர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவின் முதல் ரூ.1,000 கோடி வசூல் சாதனையும் அவரது படத்தின் மூலமாகவே நிகழுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

வசூலில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நிலையில், ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினருக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் என்ன கார் பரிசளிக்கப் போகிறார் என்பதைக் காணவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் மற்றும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ‘ஜெயிலர்’ குடும்பம் இரட்டிப்பு கொண்டாட்டத்தில் திளைத்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Jailer 2 Box Office Collection: Allu Arjun Praises Rajinikanth’s ₹549 Crore Record
"எனது அன்பு பெயர்த்திக்கும்.." அனிருத் - காவ்யா வரவேற்பு.. அழைப்பு விடுத்த ஸ்டாலின்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com