கோடிகளைக் குவித்த ஜெயிலர் 2; ஆனாலும் 'லோகேஷ்' படத்தை விட பின்தங்கிய நெல்சன்.. முதல்நாள் வசூல் எவ்வளவு? 
பொழுதுபோக்கு

கோடிகளைக் குவித்த ஜெயிலர் 2; ஆனாலும் 'லோகேஷ்' படத்தை விட பின்தங்கிய நெல்சன்.. முதல்நாள் வசூல் எவ்வளவு?

ஜெயிலர் 2 படத்தின் மூலம் தான் பாக்ஸ் ஆபீஸ் அரசன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

மாலை முரசு செய்தி குழு

ஜெயிலர் 2 திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகி நேர்மறை விமர்சனகளைப் பெற்றுவருகிறது. ரூ.70 கோடிக்கும் அதிகமாக முன்பதிவில் வசூல் செய்திருந்ததால் முதல்நாள் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிரூத் இசையில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் மூலம் தான் பாக்ஸ் ஆபீஸ் அரசன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் சூப்பர் ஸ்டார்!

வெளிநாடுகளில், 'ஜெயிலர் 2' வெளியான முதல் நாளிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அமெரிக்காவிலும் தென்கிழக்கு ஆசியா போன்ற பிராந்தியங்களிலும் ரஜினிகாந்த் தனித்த ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.

இது 'ஜெயிலர் 2' முதல் நாளிலேயே சர்வதேச அளவில் 6 மில்லியன் டாலர்களை வசூலிக்க உதவியது. இதன் மூலம், இப்படத்தின் முதல் நாள் உலகளாவிய மொத்த வசூல் பிரமிக்க வைக்கும் வகையில் ₹125 கோடியை எட்டியுள்ளது.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் தளம் கூறுவதன்படி, இதன் மூலம் இந்திய சினிமா வரலாற்றில் மிகப் பெரிய ஓப்பனிங் பெற்ற முதல் 20 இடங்களுக்குள் வருகிறது ஜெயிலர் 2.

ரஜினிகாந்த்தின் முந்தைய படமான கூலி (₹151 கோடி) மற்றும் விஜய்யின் லியோ (₹143 கோடி) ஆகிய படங்களுக்குப் பிறகு, ஒரு தமிழ்ப் படத்தின் மூன்றாவது மிகப்பெரிய முதல்நாள் வசூல் இதுவாகும்.

ஜெய்லர் 2, கோட் (₹101 கோடி), பதான் (₹105 கோடி) மற்றும் அனிமல் (₹116 கோடி) உள்ளிட்ட பல பான் இந்தியா மற்றும் பாலிவுட் பிளாக்பஸ்டர் படங்களின் தொடக்க வசூலை முறியடித்துள்ளது.

இந்திய சினிமாவில் பிரபாஸ் ராம் சரண், விஜய், யாஷ், ஷாருக் கான் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஆகிய நடிகர்களின் படங்கள் முதல்நாளே 100 கோடி வசூல் செய்திருந்தாலும் மூன்று 100 கோடி ஓப்பனிங் வசூல் கொடுத்த இரண்டாவது நடிகர் ரஜினிகாந்த். முதலிடத்தில் பிரபாஸ் 5 படங்கள் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.