பொழுதுபோக்கு

'ஜெயிலர் 2' விமர்சனம்.. உண்மையிலேயே படம் எப்படி இருக்கு?

ரஜினி படங்கள் எத்தனையோ இருந்தாலும் பாட்ஷா, படையப்பா ஆகிய இவ்விரு படங்களை பார்த்தா மட்டும் ஒரு ஃபீல் வரும்..

மாலை முரசு செய்தி குழு

'சன் டிவி' எனும் தயாரிப்பு குழுமம் ஏன் லாபகரமான நிறுவனமாக இயங்குகிறது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் 'ஜெயிலர் 2' எனும் Product.

இப்போ விமர்சனத்துக்கு வருவோம். 'ஜெயிலர் 1' முடிந்த இடத்தில் இருந்து பாகம் 2 தொடங்குகிறது. ஸ்ட்ரெய்ட் Sequel படம் தான். ஆனால்.. அதை வழங்கிய விதம் இருக்கே.. அப்பப்பா! உண்மையில் பல காரணங்களுக்காக (?) சோகத்திலும், வேதனையிலும் மனதில் புழுங்கிக் கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் இயக்குனர் நெல்சனுக்கு பெட்ரோலில் தான் ஆரத்தி எடுக்கணும். படத்தை அப்படி தகதகவென பற்றியெரிய வைத்திருக்கிறார் இயக்குனர். 76 வயதில் ரஜினியை இவ்வளவு மாஸாக, ஸ்டைலாக காட்ட முடியுமா? அப்படி முடியுமென்றால் அதை எப்படி Execute செய்ய வேண்டும்? என்று இளம் இயக்குனர் நெல்சனிடம் கிளாஸ் படிக்கலாம். (லோகேஷ் ஜி.. உங்களுக்கு இருக்கு அப்புறம்!)

சரி.. மீண்டும் கதைக்கு வருவோம். ஜெயிலர் 1-ல் இருந்த வீட்டை மாற்றி வேறொரு ஊருக்கே ஷிஃப்ட் ஆகி, இறந்து போன.. சாரி.. சாரி.. பிள்ளையா இருந்தாலும் நேர்மை தவறிய.. தானே கொன்ற தனது மகனின் புகைபடத்துக்கு மாலை அணிவித்து விளக்கு ஏற்றி கும்பிட்டு அமைதியுடன் தனது நாட்களை கழித்து வருகிறார் ஜெயிலர். ஆனால்.. வர்மனையும் பறிகொடுத்து, 3 கன்டெய்னரில் திருடப்பட்ட கோவில் சிலைகளையும் பறிகொடுத்த சிண்டிகேட் அமைதியா இருக்குமா? யெஸ்.. கிளைமேக்சில் வர்மன் சொல்வாரே.. "ஜெயிலர்.. என்ன கொன்னாலும் உன்னால ஒருநாளும் நிம்மதியா இருக்க முடியாது.. இது பெரிய நெட்ஒர்க்.. யார் எங்கிருந்து வருவாங்கன்னு உனக்கு தெரியாது'-னு".. அதாங்க இந்த பார்ட் 2-வோட கதையும் கூட.

சூப்பர் மார்க்கெட்டில் ஒரு சாதாரண ஊழியராக பணிபுரிந்து வரும் ஜெயிலரை ஒட்டுமொத்த கும்பலும் தேடுது.. 'யார் வர்மனை கொன்றது?' என்ற விடை தெரியா கேள்வியுடன்.. ஒருவழியாக ரஜினி தான் அந்த நபர் என்ற உண்மையை கண்டுபிடித்து துப்பாக்கி முனையில் அவரை நிற்க வைத்து அவர் கதையை முடிக்கும் நேரத்தில் தான் தெரிகிறது.. 'நாம ஜெயிலருக்கு ஸ்கெட்ச் போடல.. ஜெயிலர் தான் நமக்கு ஸ்கெட்ச் போட்ருக்காருன்னு'..

ரஜினி படங்கள் எத்தனையோ இருந்தாலும் பாட்ஷா, படையப்பா ஆகிய இவ்விரு படங்களை பார்த்தா மட்டும் ஒரு ஃபீல் வரும்.. இந்த மாஸ்டர் பீஸ்களை இனி யாராலும் அடிக்க முடியாது.. எந்த படத்தாலும் அடிக்க முடியாது என்று.. அப்படியொரு ஃபீல் 'ஜெயிலர் 2'-விலும் வரும் என்பது இப்படத்தின் வெர்டிக்ட். இந்த வெற்றியை நெல்சன் எதிர்பார்த்திருப்பாரா என்று தெரியவில்லை. அதாவது, 'குறிவைச்சா இரை விழணும்'-னு நினைச்சு எடுத்திருந்தால்.. இந்த era-வின் மாஸ் ஹீரோக்களின் மோஸ்ட் ஃபேவரைட் அல்லது மோஸ்ட் வாண்ட்டட் இயக்குனர்கள் பட்டியலில் இனி நெல்சனும் இருப்பார்.

காட்சிகளை அவர் அடுக்கிய விதம் இருக்கே.. ஒருவேளை AI-ல screenplay ஒர்க் பண்றாரோன்னு கூட தோணுது. வெற்றிக்கான டெம்ப்ளேட்டை பிடிச்சிட்டார். எந்த சீனுக்கு அப்புறம் என்ன சீன் வரணும்.. எந்த Low-வுக்கு அப்புறம் அந்த High-வரணும்-னு லாங் சைஸ் நோட்டு போட்டு அதில் எழுதி வச்சு எடுத்த மாதிரி தெளிவா screenplay பண்ணியிருக்கார். அதுதான் ரசிகர்களின் பல்ஸை ஏற்றி.. இறக்கி.. ஏற்றி.. இறக்கி.. ஏறி அடிக்க வைத்திருக்கிறது.

யார் அவன்? யார் அவன்? என்று எதிரிகள் ஒரு கர்ப்பிணி பெண்ணை அடித்து ரஜினி குறித்து கேட்கும் போது, 'என் பேரு டைகர் முத்துவேல் பாண்டியன்' என்று ரஜினி தன்னைத் தானே அறிமுகப்படுத்தும் அந்த ஒரு காட்சியே போதும் படத்தின் வெற்றியை உறுதி செய்ய! இதற்கு மேல் இப்படத்தை பற்றி எதுவும் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். தியேட்டரில் பாருங்க..

ஆங்! முதல் பாதியிலேயே கூச்சல் போட்டு உங்க எனர்ஜியை வேஸ்ட் பண்ணிடாதீங்க.. இரண்டாம் பாதியில அப்புறம் காத்து தான் வரும். ஏன்னா.. கிளைமேக்ஸ்-லாம் 'உச்சக்கட்ட' ரகம்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்