"நெல்சா.. என்ன ரைட்டிங்யா!!" வெளியானது 'ஜெயிலர் 2' ஓவர்சீஸ் ரிப்போர்ட்.. பாராட்டி தள்ளிய ரசிகர்கள்!

புதிய டைட்டில் கார்டில் இருந்தே சம்பவத்தைத் தொடங்கிவிட்டார் நெல்சன். மாஸ்ஸான இன்டர்வெல் காட்சி இடம்பெற்றுள்ளது.
Jailer 2 Overseas Review: Fans Go Wild as Superstar Rajinikanth Delivers a Massive Comeback
"நெல்சா.. என்ன ரைட்டிங்யா!!" வெளியானது 'ஜெயிலர் 2' ஓவர்சீஸ் ரிப்போர்ட்.. பாராட்டி தள்ளிய ரசிகர்கள்!
Published on: 
Updated on: 
1 min read

ஜெயிலர் 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய உடனேயே அடுத்தடுத்த நாட்களுக்கும் விற்று தீர்ந்தது.

தமிழ்நாட்டில் முதல் காட்சி காலை 8:30 மணிக்குத் தொடங்கவுள்ளது. பிற மாநிலங்களில் 6 மணிக்குத் தொடங்குகிறது.

வெளிநாடுகளில் அதற்கு முன்பாகவே தொடங்கியதால் வெளிநாடுகளில் இருந்து வரும் ரிவியூக்களை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

சிங்கப்பூரில் நேற்று இரவு முதலே திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் குவிந்துள்ளனர். கூட்டம் கூட்டமாகவும் குடும்பம் குடும்பமாகவும் அலை மோதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Movies Singapore எக்ஸ் பக்கம் சொல்வதன்படி, புதிய டைட்டில் கார்டில் இருந்தே சம்பவத்தைத் தொடங்கிவிட்டார் நெல்சன். மாஸ்ஸான இன்டர்வெல் காட்சி இடம்பெற்றுள்ளது.

இறுதியாக ஹ்ரித்திக் ரோஷன், மோகன் லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் கட்சியும் உள்ளதாம்.

76 வயதிலும் புதிய வரலாற்றை படைத்துள்ளார் ரஜினிகாந்த். டிக்கெட் முன்பதிவில் மட்டுமே 70 கோடி வசூல் ஆகியிருக்கிறது. முதல் நாள் முடிவில் காலக்ஷன் 140 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை 2026-ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படம் விஜய்யின் கடைசிப் படமான ஜன நாயகன். அதனைத் தொடர்ந்து சூர்யாவின் கருப்பு வெளியானது. ஆனால், இந்த இரண்டு படங்களுமே 350 கோடி ரூபாய் வசூலைக் கடக்கவில்லை.

ரஜினிகாந்த் மற்றும் ஜெயிலர் முதல் பாகம் ஏற்படுத்திய ஹைப்புக்கு ஏற்ற நேர்மறையான விமர்சனங்கள் வந்துள்ளதால் வசூலில் இந்த படம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jailer 2 Overseas Review: Fans Go Wild as Superstar Rajinikanth Delivers a Massive Comeback
ஜெயிலர் 2: US முதல் சிங்கப்பூர் வரை.. ரஜினி ரசிகர்கள் அலப்பறை.. ஆட்டம் போட்ட மகள் சௌந்தர்யா!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com