“சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்ட.. சின்ன குழந்தையும் சொல்லும்” என்ற வரிகளுக்கு ஏற்ப அன்று முதல் இன்றுவரை தனது நடிப்பாலும் தனித்துவமான ஸ்டைலிலும் தனெக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் ரஜினிகாந்த். அபூர்வ ராகங்கள் படத்தில் தொடங்கி 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை தனது நடிப்பால் கட்டி வைத்திருக்கிறார் என்று சொல்லலாம். இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் அவரது நடிப்புக்கு ஓய்வு கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆரம்ப காலகட்டத்தில் ரஜினியும் கமலும் சேர்ந்து நடித்த படங்கள் மிக பெரிய அளவில் வெற்றிகளை அள்ளி குவித்தது. பின்னர் இருவரும் தங்களது பயணத்தில் தனித்தனியாக நடிக்க தொடங்கி ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போல பல நல்ல படங்களை தங்களது நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிசளித்தனர். எனவே இருவரின் ரசிகர்கள் மீண்டும் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்திற்காக காத்து கொண்டிருந்த நிலையில் இருவரும் சேர்ந்து விரைவில் படம் நடிப்பதாக உறுதி செய்திருந்தனர்.
அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்ற செய்திகளை பரவி வந்த நிலையில் தற்போது இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தினை நெல்சன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தனது நடிப்பிற்கு ஓய்வளிக்க இருக்கும் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் கடைசி படமாக ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்கும் படம் அமையும் என்ற கேள்வி எழுந்து வருகிறது. காரணம் தற்போது ஜெயிலர் 2 படபிடுப்பு நடைபெற்று வரும் நிலையில் அடுத்து சுந்தர் சி இயக்கம் படத்தில் ரஜினிகாந்த நடிப்பதாக உறுதியாகியுள்ளது. அந்த வகையில் இருவரையும் வைத்து நெல்சன் எடுக்கும் படத்திற்கான படப்பிடிப்பு 2027 ஆம் ஆண்டில் தொடங்க உள்ள நிலையில் இது தான் சூப்பர் ஸ்டார் நடிக்கும் கடைசி படமாக இருக்கும் என பேசப்பட்டு வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.