
இயக்குனர் மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள் படத்தில் துவங்கி பைசன் வரை, 5 படங்களை இயக்கியுள்ளார். இந்த 5 படங்களும் தமிழ்ச்சூழலில் மிக முக்கியமானதொரு படமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் இந்த 5 படங்களும் தென் மாவட்டத்தின் நிலப்பரப்பையும், அங்குள்ள மக்களின் வாழ்வியலையும், மேலும் அங்கே நிலவும் கடுமையான் சாதிய முரண்களையும் ரத்தமும் சதையுமாக எடுத்துக்காட்டுபவையாக உள்ளன.
அந்த வரிசையில் தற்போது பைசனும் இணைந்துள்ளது.தென் மாவட்டத்திலிருந்து சென்று முதன் முதலில், அர்ஜுனா விருது பெற்ற “மனத்தி கணேசன்’ என்ற கபடி வீரரின் வாழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்டதுதான் பைசன் திரைப்படம். இப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்த சூழலில்தான் இயக்குனர் மாரி செல்வராஜ், விமான நிலையத்தில் அவரது ரசிகர் மன்றம் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் பைசன் எனது ஐந்தாவது படமாக ரிலீஸ் ஆகி உள்ளது. பைசன் ரிலீஸ் ஆன நாளிலிருந்து மிகப்பெரிய மக்கள் கொண்டாட்டத்தையும் வெற்றியும் அடைந்துள்ளது. எந்த நோக்கத்துக்காக எடுக்கப்பட்டதோ அதை முழுமையாக்கி உள்ளது, என்பதில் சந்தோஷம்.திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி தியேட்டர் விசீட்க்காக வந்துள்ளேன். எல்லோருக்கும் நன்றி வாழ்த்துக்கள்.
மக்கள் மிகப் பெரிய வெற்றியை கொடுத்துள்ளார்கள்.சந்தோஷமாக உள்ளது. பெரும் நம்பிக்கை கொடுக்கிற மாதிரியான வெற்றியை பைசன் திரைப்படத்திற்கு மக்கள் கொடுத்துள்ளார்கள்.
எல்லோருக்கும் ரொம்ப நன்றி இந்த படம் மக்களுக்காக எடுக்கப்பட்டது. பைசன் மக்களுக்காக எடுக்கப்பட்ட படம். தமிழ் மக்களுக்காக எடுக்கப்பட்ட படம். ஒட்டுமொத்த தமிழக மக்களும் அதை ஏற்றுக் கொண்டதும் அதை கொண்டாடுவதும் மிக சந்தோஷமாக இருக்கிறது அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.அடுத்து நடிகர் தனுஷ் அவர்களை வைத்து படம் எடுக்கிறேன். அது ஒரு ஹிஸ்டாரிக்கல் மூவி" என்றார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.