பொழுதுபோக்கு

“பிரபல நடிகையை உருவ கேலி செய்த மிருணாள் தாகூர்” - டீனேஜ் பேச்சு குறித்து வருத்தம்.. புரிதல் இல்லாமல் பேசிவிட்டேன் என விளக்கம்!

நடிகை பிபாஷா பாசுவை உருவ கேலி செய்யும் விதமாக ஒரு தனியார் தொலைக்காட்சி பெட்டியில் பிபாஷா பாசு பார்ப்பதற்கு ஆண் போல இருக்கிறார்

Mahalakshmi Somasundaram

பிரபல நடிகை மிருணாள் தாகூர், நடிகை பிபாஷா பாசு குறித்து உருவ கேலி செய்து பேசியதற்கு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் வருத்தம் தெரிவித்துள்ளார். ஹலோ நந்தன் என்ற மராத்திய படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகிய மிருணாள் 2022 ஆம் ஆண்டு வெளியான சீதாராமாம் படத்தில் நூர்ஜஹான்(சீதா மகாலட்சுமி) என்ற கதாபாத்திரத்தில் நடித்ததான் மூலம் ரசிகர்கள் கொண்டாடப்பட்டு பிரபலமானார். சீதாராமாம் திரைப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடத்தி தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வந்த மிருணாள் தனது டீனேஜ் பருவத்தில் பல பெட்டிகளை அளித்துள்ளார். அதில் நடிகை பிபாஷா பாசுவை உருவ கேலி செய்யும் விதமாக ஒரு தனியார் தொலைக்காட்சி பெட்டியில் “பிபாஷா பாசு பார்ப்பதற்கு ஆண் போல இருக்கிறார்” என பொருள் தரும் விதமாக பேசி இருப்பார் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அதற்கு நடிகை மிருணாள் தாகூர் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கமளித்துள்ளார் அதில் “எனது 19 வயதில் இளம் பருவத்தில் சில சமயங்களில் முட்டாள்தனமாக சில கருத்துக்களை பேசியிருக்கிறேன்.

நான் பேசும் கருத்துக்கள் மற்றவர்களை எந்த அளவிற்கு காயப்படுத்தும் என்பதை நான் யோசிக்காமல் பேசியிருக்கிறேன், ஒருவரை உருவ கேலி செய்ய வேண்டும் என்பது எனது நோக்கமில்லை நான் விளையாட்டாக கூட அப்படி பேசி இருக்க கூடாது, எந்த ஒரு புரிதலும் இல்லாமல் நான் அவ்வாறாக பேசி இருக்கக்கூடாது, அந்த பருவத்தில் தெரியாமல் பேசிவிட்டேன் இருப்பினும் அது தவறுதான்” என தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இதனை பார்த்து அவரது ரசிகர்கள் மிருணாள் தாகூரின் செயலை குறித்து பாராட்டி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.