“MR & MRS Rangaraj” - என்று பதிவிட்ட 2-வது மனைவி.. “Rangaraj’s wife” என உறுதிப்படுத்திய முதல் மனைவி.. மாதம்பட்டி வாழ்க்கையில் என்ன நடக்கிறது?

ஏற்கனவே ரங்கராஜுக்கு சுருதி என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இதனை பார்த்து திரையுலகினரும் இணைய வாசிகளும் அதிர்ச்சியடைந்து
“MR & MRS Rangaraj” - என்று பதிவிட்ட 2-வது மனைவி.. “Rangaraj’s wife” என உறுதிப்படுத்திய முதல் மனைவி.. மாதம்பட்டி வாழ்க்கையில் என்ன நடக்கிறது?
Published on
Updated on
2 min read

பிரபல சமையல் கலைஞராகவும், நடிகராகவும் இருந்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த இவர் சமையல் கலைஞராக பல பிரபலங்களின் நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் படங்களிலும், தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார். அனைவரும் சிறு வயதிலேயே அடுத்தடுத்து முன்னேறும் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் என பாராட்டி வரும் சூழலில் நேற்று முன்தினம் (ஜூலை 26) பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரீஸில்டா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் ஜாய் கிரீஸில்டா நெற்றியில் ரங்கராஜ் குங்குமம் வைத்திவிடுகிறார், அந்த புகைப்படத்தின்  கீழ் “MR & MRS rangaraj, HUSBANDWIFE” எனவும் பதிவிட்டிருந்தார். 

ஏற்கனவே ரங்கராஜுக்கு சுருதி என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இதனை பார்த்து திரையுலகினரும் இணைய வாசிகளும் அதிர்ச்சியடைந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், நேற்று (ஜூலை 27) அதே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரங்கராஜ் உடன் ஜாய் கிரீஸில்டா மாலையும் கழுத்துமாக நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து  "Baby loading 2025. We are pregnant. 6th month of pregnancy," என பதிவிட்டுள்ளார்.

சில மாதங்களாகவே ரங்கராஜும் அவரது ஆடை வடிவைமைப்பாளரான ஜாயும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல் பகிரப்பட்டு வந்தது. ஆனால் இதை மறுக்கும் விதமாக ரங்கராஜ் முதல் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டும், “rangaraj’s wife” என பயோ வைத்தும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

ரங்கராஜ், ஜாய் கிரீஸில்டாவை திருமணம் செய்து கொண்டது குறித்தும், மனைவி சுருதியை பற்றியும் வாய் திறக்காமல் இருப்பது நெட்டிசன்களை சந்தேகம் அடைய வைத்துள்ளது. மேலும் இது குறித்து இன்று வரை சுருதியும் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வருகிறார். ஏற்கனவே ஜாய் கிரீஸில்டா ,கிறிஸ்துமஸ் போது அவரது கேக்கில் ரங்கராஜ் என்று எழுதி இருந்ததும், அவரது கழுத்தில் ரங்கராஜ் என பெயர் போட்ட டாலர் அணிந்திருந்ததும் மற்றும் காதலர் தினத்தை ரங்கராஜ் உடன் கொண்டாடியதாக வீடியோ பதிவிட்டதும், வைத்து ஜாய் கிரீஸில்டா ரங்கராஜை திருமணம் கொள்ள போகிறார் என நெட்டிசன்கள் தெரிவித்து வந்தனர்.

தற்போது ஜாய் கிரீஸில்டா அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். எனவே ரங்கராஜ் இரண்டாவது திருமணம் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இதை பற்றி ரங்கராஜ் மற்றும் சுருதி பதிலளிக்காதவரை,  எது உண்மை, எது போய், நடந்தது என்ன? என்பதை குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள முடியாது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com