Nayanthara: எந்த புரோமோஷனுக்கும் வராதவர் யாஷ் படத்திற்கு வந்தது ஏன்? 
பொழுதுபோக்கு

Nayanthara: எந்த புரோமோஷனுக்கும் வராதவர் யாஷ் படத்திற்கு வந்தது ஏன்? Toxic நிகழ்வில் விளக்கம்!

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் உடன் கியாரா அத்வானி, தாரா சுதரியா, நயன்தாரா, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் டாக்ஸிக்.

மாலை முரசு செய்தி குழு

தென்னிந்திய சினிமாவின் முகங்களில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. கடந்த இரண்டு தசாப்தங்களாக முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் இவர், கடந்த சில ஆண்டுகளாக எந்தவிதமான பட புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை.

இந்த நிலையில், கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டாக்ஸிக்’ படத்தின் புரமோஷன் நிகழ்வில் நயன்தாரா கலந்துகொண்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது. இதற்கான காரணத்துக்கு விழா மேடையிலேயே பதில் அளித்துள்ளார் நயன்.

நயன்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யாஷுடன் கியாரா அத்வானி, தாரா சுதரியா, நயன்தாரா, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘டாக்ஸிக்’.

வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு பெங்களூருவில் நடைபெற்றது.

ஏன் புரமோஷன்களில் கலந்துகொள்வதில்லை?

இதில் பேசிய நயன்தாரா, "படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூடாது என்ற எந்த எண்ணமும் இல்லை. அது எனக்கு அவ்வளவு சரியாக வராது என்பதால், அதிலிருந்து நான் தள்ளியே இருக்கிறேன்.

ஆனால், இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். அதற்குக் காரணம் யாஷ் என்று நினைக்கிறேன். இந்த நிகழ்வுக்கு வர, யாஷுடைய ஒரு போன் கால் எனக்குப் போதுமானதாக இருந்தது" என்றார்.

ஆச்சரியப்பட வைத்த இயக்குநர்

தொடர்ந்து பேசிய நயன், "மேலும், இப்படத்தின் உருவாக்கத்தில் பங்கெடுத்துள்ள தயாரிப்பாளர் வெங்கட் சார், சக நடிகைகளான ருக்மணி, தாரா, ஹூமா, கியாரா, ஒளிப்பதிவாளர் ராஜீவ் சார், இயக்குநர் கீது என அனைவருக்கும் தொலைநோக்குப் பார்வை உள்ளது.

"நானும் கீதுவும் ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளோம். அப்போது இருந்த கீது, இப்போது நிறைய மாறியிருக்கிறார்.

இந்தப் படத்துக்காக அவர் என்னை அழைத்தபோது, படத்தில் நிறைய நடிகர்கள் இருந்தால் நடிக்க வேண்டாம் என்ற முடிவில் இருந்தேன். ஆனால், கீது அதற்குப் பல கேள்விகளைக் கேட்டார். சரி, நேரில் வந்து கதை சொல்லுங்கள் என்றேன். ‘இப்படி ஒரு இயக்குநரா?’ என என்னை ஆச்சரியப்பட வைத்துவிட்டார். இந்தப் படம் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும். நடிகர்கள் அனைவருக்கும் கீது பக்கபலமாக இருந்தார்" என வாழ்த்தினார்.

ராக்கி பாயின் ராஜ்ஜியத்துக்குள்...

நயன்

யாஷ் குறித்துப் பேசும்போது, "ராக்கி பாய்... நான் பல உச்ச நட்சத்திரங்களுடன் நடித்திருக்கிறேன். முதன்முதலில் யாஷைச் சந்தித்தபோது, அவரை சினிமாவில் எப்படிப் பார்த்தேனோ, அப்படித்தான் நிஜத்திலும் இருந்தார்.

நான் ராக்கி பாயின் ராஜ்ஜியத்துக்குள் நுழைகிறேனா என்பது போல உணர்ந்தேன். இப்படி உழைப்பைக் கொடுக்கும் ஒரு நடிகரை நான் பார்த்ததே இல்லை. தன் வாழ்க்கையில் இருந்து நான்கரை ஆண்டுகளை இந்தப் படத்துக்காகக் கொடுத்துவிட்டார். தனிப்பட்ட வாழ்க்கையையும் தியாகம் செய்து, இந்தப் படத்துக்காகவே தன்னை ஒப்புக்கொடுத்தார்" எனப் புகழாரம் சூட்டினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்