Allu Arjun X post 
பொழுதுபோக்கு

"சட்டை கூட கசங்காம.. ₹500 கோடிக்கு மேல் வசூல் கொடுக்க இவரால் மட்டுமே முடியும்!” - 'ஜெயிலர் 2' குறித்து அல்லு அர்ஜுன்

"சட்டைக் கூட கசங்காமல் 500 கோடி அடிக்க ரஜினியால் மட்டுமே முடியும்!. முழு அணிக்கும் வாழ்த்துக்கள்!"

Vinvizhi Leninton

ஏற்கனவே, 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 'ஜெயிலர் 2' சொல்லவே தேவையில்லை அது திரையரங்குகளில் சக்கப்போடு போட்டு வருகிறது. தற்போது அது பாக்ஸ்ஆபீசில் ரூ. 500 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது. மேலும், விரைவில் ரூ. 1000 கோடியை எட்டும் என்றும் ரசிகர்கள் கூறப்படுகிறது. பலரும் இந்த திரைப்படத்தை பாராட்டிய நிலையில், தற்போது அல்லு அர்ஜுன் தனது கருத்தினை அவரது அதிகாரப்பூர்வ X தளபக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார், இசையமைப்பாளர் அனிருத், சூப்பர் ஸ்டார் ரஜினி ஆகியோரது கூட்டணியில் வெளியான திரைப்படம் 'ஜெயிலர் 2'. இந்த திரைப்படம், தற்போது திரையரங்குகளில் அசுர வேகத்தில் பயணித்து கொண்டிருக்கிறது. மழை என்றும் பாராமல் ரசிகர்கள் 'ஜெயிலர் 2' திரைப்படத்தினை காண குவிந்து வருகின்றனர். மேலும், தீபாவளிக்கு வரிசைகட்டி நின்று கொண்டிருக்கும் மற்ற திரைப்படங்களை கூட இந்த 'ஜெயிலர் 2' மிஞ்சி விடும் என்றும் பலராலும் கூறப்படுகிறது. தற்போது வரை திரையரங்குகளை தனது கட்டுப்பாட்டில் 'ஜெயிலர் 2' வைத்துள்ளது.

இந்த திரைப்படத்தை பார்த்த பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை அவ்வப்போது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக பல பிரபலங்கள் அதை 'ஃபேன் பாய்' தருணமாக அதை பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த வரிசையில் நடிகர், அல்லு அர்ஜுன் இணைந்துள்ளார். 'ஜெயிலர் 2' திரைப்படம் குறித்து தனது சமூகவலைதளப்பக்கத்தில் இதுகுறித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், "ரஜினிகாந்த் சாரின் நட்சத்திர அந்தஸ்து, ஸ்டைல் ​​மற்றும் வசீகரத்தின் உண்மையான எடுத்துக்காட்டு!. அட்ரினலினை அள்ளித் தெளிக்கும் ஒரு கமர்ஷியல் என்டர்டெய்னர்!. சகோதரரே... அனிருத் கலக்கிவிட்டீர்கள்!. அனைத்துக் கலைஞர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும், தயாரிப்பாளரும் இந்தப் படத்தில் தங்களின் முழு மனதையும் கொட்டியுள்ளனர்.

'ஷோமேன்' நெல்சன் திலீப்குமார் சார் ஒரு அட்டகாசமான ஹிட்டை வழங்கியுள்ளார்!. சட்டைக் கூட கசங்காமல் 500 கோடி அடிக்க ரஜினியால் மட்டுமே முடியும்!. முழு அணிக்கும் வாழ்த்துக்கள்!" என்று அவர் தனது X தளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில் தற்போது அந்த வரிசையில் அல்லு அர்ஜுனும் இணைந்துள்ளார் என்றுதான் கூறவேண்டும்.

தீபாவளி நெருங்கும் வேளையில் இன்னும் திரையரங்குகளை 'ஜெய்லர் 2' தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக இருக்கட்டும், மழை போன்ற எந்த இடைஞ்சல் வந்தாலும் சரி ரசிகர்களை தன் பக்கம் ஈர்ப்பதாக இருக்கட்டும், உண்மையிலேயே அல்லு அர்ஜுன் கூறியது போல 'சட்டை கூட கசங்காமல்' அசால்ட்டாக ரூ. 500 கோடியை 'தாண்டி சென்றுகொண்டிருக்கிறார் 'சூப்பர் ஸ்டார்' என்றுதான் கூறவேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.