பொங்கலை முன்னிட்டு தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த இரண்டு பெரிய படங்கள் வெளியாகும் என ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் இன்று (ஜன 9) ஆம் தேதி வெளியிடப்பட இருந்த விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனேவ படக்குழு பட ரிலீஸ் ஒத்தி வைத்திருக்கும் நிலையில் தொடர்ந்து அதற்கான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா நடித்து, சுதா கொங்கரா இயக்கி, ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பராசக்தி திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் தற்போது வரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே தணிக்கை வாரிய குழு முழுமையாக படத்தை பார்த்து சில காட்சிகளை நீக்க கூறிய நிலையில் அதனை நீக்கி படக்குழு மீண்டும் படத்தை அனுப்பிய நிலையில் ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த படம் 1965ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளுக்கான வரலாற்று சான்றுகளை தணிக்கை வாரியம் சமர்ப்பிக்குமாறு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து படக்குழுவினர் தணிக்கை சான்று கேட்டு தற்போது வரை உயர்நீதிமன்றத்தில் எந்த வழக்கும் தொடராதா நிலையில் இன்று மாலைக்குள் தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஜனநாயகன் படம் குறிப்பிட தேதியில் வெளியாகாத நிலையில் தற்போது பராசக்தி படத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது தமிழ் ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பராசக்தி திரைப்படத்தை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடை விதிக்க இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, பட தயாரிப்பு நிறுவனம் சார்பில், ‘முன்னணி நடிகர்களை கொண்டு பெரும் பொருள் செலவில் திரைப்படம் எடுக்கபட்டுள்ளதால், சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியானால் ஈடு செய்யமுடியாத இழப்பு ஏற்படும்’ என தெரிவித்தார்.இதையடுத்து நீதிபதி பராசக்தி படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்