2005 - ல் விஜய், ஜெனிலியா நடிப்பில், ஜான் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் “சச்சின்” இப்படம் வெளியானபோது பெரிதும் கொண்டாடப்படாவிட்டாலும் இப்போது அந்த படம் வெளியாகி 20 வருடங்கள் ஆனதை கொண்டாடும் விதமாக மீண்டும் திரையிடப்பட்டுள்ளது.
இந்த மாதம் 20 -தேதி திரையிடப்பட்ட “சச்சின்” படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரும் கொண்டாடி வரும் நிலையில் கதாநாயகன், கதாநாயகி இவர்களை தாண்டி மற்றொரு கதாபாத்திரமான ஜெனிலியாவிற்கு தோழியாக நடித்த ரஷ்மி முரளி தற்போது வைரல் ஆகி வருகிறார்.
இந்த திரைப்படத்தில் அமைதியான, ஒரு கல்லூரி மாணவியாக நடித்திருப்பார். படம் வெளியான காலகட்டத்தில் இவருடைய கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், தற்போதைய நெட்டிசன்கள் அவரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
திரையில் அவ்வப்போது மட்டுமே தோன்றும், இவரது கதாபாத்திரத்தின் காட்சிகளை மட்டும் எடிட் செய்து ஒரு இன்ஸ்டாப்பாக்கத்தில் வெளியிட்டுள்ளார் பிரசாந்த் என்பவர், இந்த வீடியோ பலரால் ரசிக்கப்பட்டு வைரல் ஆன நிலையில் ரஷ்மிக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.
சில நெட்டிசன்கள் ஜெனிலியாவை விட ரஷ்மியே அழகாக இருக்கிறார், என்று கருத்து பதிவிட்டு வருவதோடு அவருடைய சமூக வலைதள பக்கங்களை தேடி தேடி பாலோ வருகின்றனர்.இதையடுத்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள ரஷ்மி, "20 வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
உங்களுடைய அன்பிற்கு நன்றி. இப்போது நான் மகிழ்ச்சியடைகிறேன், அந்த கதாபாத்திரத்தை தேர்தெடுத்து நடித்ததற்கு” எனவும் பேசியுள்ளார்.மேலும் இன்றைய இளைஞர்கள் படங்களை பார்த்து ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்