பொழுதுபோக்கு

மணிரத்தினம் படத்தில் சாய் அபியங்கார் இல்லை.. இசைப்புயலை உறுதி செய்தது தயாரிப்பு நிறுவனம்!

ஜென்-Z பட்டாளமே இருக்கிறது. மேலும், ஏ.ஆர். ரஹ்மானை இளம் வயதில் அவரின் திறமைக்காக அடையாளம் கண்டு கொண்டது..

மாலை முரசு செய்தி குழு

மணிரத்னத்தின் அடுத்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்கிறார் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தற்போது மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கைகோர்க்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கும் புதிய திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. மேலும் அவருக்கு ஜோடியாக, சாய்பல்லவி நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், இப்படத்தில் நடிப்பவர்களை தாண்டி இசையமைப்பாளர் பெயர் பெரும் பேசுபொருளாக இருந்தது, காரணம் புதிய இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் இசையமைக்கிறார் என்ற வதந்தி பரவிவந்தது. இந்நிலையில் மணிரத்தினம் படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இணைகிறார் என்று அறிவிப்புவெளியாகியுள்ளது.

இயக்குநர் மணிரத்னத்தின் 'செக்க சிவந்த வானம்' படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். தற்போது நாயகனாக மணிரத்னத்தின் படத்தில் நடிக்கவிருக்கிறார். இவருக்கு ஜோடியாக சாய்பல்லவி இணைய இருக்கிறார் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் சேர்ந்து தயாரிக்கிறது. இசை உரிமையை 'சோனி' நிறுவனம் வாங்கியிருக்கிறது என்று மெட்ராஸ் டாக்கீஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சமீபகாலமாக, சாய் அபியங்கர்தான் மணிரத்தினத்தின் அடுத்தப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் என்ற செய்தி பட்டிதொட்டி எங்கும் கேட்டுவந்தது. இவரின் இசைக்கு என்றே ஜென்-Z பட்டாளமே இருக்கிறது. மேலும், ஏ.ஆர். ரஹ்மானை இளம் வயதில் அவரின் திறமைக்காக அடையாளம் கண்டு கொண்டது போன்று சாய் அபியங்கருக்கும் வாய்ப்பு கொடுக்கிறார் என்பது போன்று பேசப்பட்டது. வந்தந்திகள் பரவிவந்தது.

ஆனால் மணிரத்தினம் என்றாலே ஏ.ஆர். ஆர்தான் என்ற அந்த இசைக்கூட்டணி மீண்டும் இந்த படத்தில் இணைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், மணிரத்னத்திற்கு இப்படமானது, 'தக் லைஃப்' படத்திற்கு பிறகு இப்படம் வருவதினாலும், இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய்பல்லவி ஜோடி சேர இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இன்னும் ஆர்வம் அதிகமாகியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.