sivakarthikeyan 
பொழுதுபோக்கு

அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ நீங்கதானா? - சிவகார்த்திகேயன் சொன்ன பளீச் பதில் என்ன!?

“மதராசி ஒரு பூரண கமர்ஷியல் எண்டர்டெயினர். இதில் நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கின்றன. நான் இதுவரை ...

மாலை முரசு செய்தி குழு

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடித்திருக்கும் ‘மதராசி’ திரைப்படம் நாளை (செப்.5) வெளியாக உள்ளது. அதிரடி காட்சிகளால் நிரம்பிய இந்த படம் ரசிகர்களிடையே  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தைப் பற்றியும், தனது கதாபாத்திரத்துக்கான தயாரிப்பு பற்றியும் சினிமாவில் தனது எதிர்காலம் குறித்தும், நடிகர் சிவகார்த்திகேயன் மனம் திறந்து மாலைமுரசு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

மதராசி படத்தில் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கலாம்?

“மதராசி ஒரு பூரண கமர்ஷியல் எண்டர்டெயினர். இதில் நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கின்றன. நான் இதுவரை நடித்ததில் அதிக ஆக்‌ஷன் காட்சிகள் உள்ள படம் இது. காதலும், நகைச்சுவையும் சேர்ந்து எல்லாம் கொண்ட ஒரு முழுமையான படம்”

ஏ.ஆர். முருகதாஸுடன் வேலை செய்த அனுபவம் எப்படி இருந்தது?

“முருகதாஸ் சார் உடன் வேலை செய்வது மிகவும் ஈசியாகவும் ரசிக்கத்  தக்க  வகையில் இருந்தது. இந்த கதாபாத்திரத்திற்காக அவர் என்னை அதிக தீவிரமும் கம்பீரமும் கொண்ட தோற்றத்துடன் இருக்கச் சொன்னார். அதற்காக உடற்பயிற்சி, உணவு பழக்கம், பயிற்சி அனைத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருந்தது”

படத்தில் உங்கள் கதாபாத்திரம் பற்றி சொல்லுங்கள்.

“இந்த படம் துப்பாக்கிகளை மையமாகக் கொண்டது. வட இந்திய வில்லனுக்கும் தென் இந்திய ஹீரோவுக்கும் இடையிலான மோதல் கதைதான்  இதன் மையம். இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது”

ருக்மணி வசந்துடன் உங்களின் ஆன்ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி எப்படி வந்திருக்கிறது?

“ருக்மணி மிகவும் திறமையான நடிகை. அவர் கதாபாத்திரத்திற்கு  நிறைய உயிரூட்டியிருக்கிறார். எங்களுடைய கெமிஸ்ட்ரி நல்லா வந்திருக்கு. ரசிகர்கள் கண்டிப்பா ரசிப்பார்கள்”

டாக்டர், அமரன் போன்ற படங்கள் மிகவும் வித்தியாசமானவை. இது உங்கள் திட்டமிட்ட தேர்வா?

“ஆம். ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்கிற எண்ணமே எனக்கு உண்டு. டாக்டர் டார்க் ஹ்யூமர் படம், அமரன் வாழ்க்கை வரலாறு படம். இப்போது மதராசி ஒரு மாஸ் கமர்ஷியல் படம். பல்வேறு வகை படங்களில் நடிக்க நான் விரும்புகிறேன்”

 ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோருக்குப் பிறகு “அடுத்த சூப்பர் ஸ்டார்” நீங்கள் தான் என்ற பேச்சுக்கள் எழுகிறது, அதைப் பற்றி உங்கள் கருத்து?

“அடுத்தது யார் என்று மக்கள் தான் முடிவு செய்வார்கள். நான் உழைக்கத் தயாராக இருக்கிறேன். அந்த நான்கு பேருக்கும் தனித்துவம் உண்டு. யாரையும் பின்பற்ற வேண்டுமென்று நான் நினைப்பதில்லை. என் ஒரே குறிக்கோள் ரசிகர்களுக்கு நல்ல படங்களை கொடுப்பதே” - என பேசியிருந்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.