பொழுதுபோக்கு

"இந்தியர்கள் பார்க்கவேண்டிய படம்" பாராட்டி தள்ளிய 'சூப்பர் ஸ்டார்'! வசூல் மழையில் துரந்தர் 2: தி ரிவெஞ்ச்

படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். ஜெய் ஹிந்த் என்று பாராட்டு தெரிவித்திருந்தார்

மாலை முரசு செய்தி குழு

சமீபத்தில் வெளியான துரந்தர் 2: தி ரிவெஞ்ச் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த், "ஒவ்வொரு இந்தியனும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய திரைப்படம்" என்று புகழ்ந்திருக்கிறார்.

'துரந்தர் 2: தி ரிவெஞ்ச்' படத்தைப் பாராட்டும் பிரபலங்களின் பட்டியலில் தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இணைந்துள்ளார். இவர், படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதோடு, படத்தின் பிரம்மாண்டமான வசூலையும் பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் தனது X தளத்தில், “என்னவொரு படம்... #துரந்தர்2 !!! ஆதித்யா தார் பாக்ஸ் ஆபிஸின் தந்தை !!! ரன்வீர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். ஜெய் ஹிந்த்" என்று பாராட்டு தெரிவித்திருந்தார்.

இதற்கு படத்தின் இயக்குநர் பதிலளித்துள்ளார். அதில் அவர், "நாங்கள் அனைவரும் 'பொழுதுபோக்கு' என்பதை ஒரு அளவுகோலைக் கொண்டே அளந்து வளர்ந்திருக்கிறோம், அது நீங்கள்தான். பல தசாப்தங்களாக எங்களை விசில் அடிக்கவும், சிரிக்கவும், அழவும் வைத்திருக்கிறீர்கள். இன்றும் அதே கம்பீரத்துடனும் நேர்த்தியுடனும செய்வது ஒரு மாயாஜாலம்தான். 'துரந்தர் 2' படத்தை 'கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்' என்று நீங்கள் குறிப்பிடுவது, என் வாழ்க்கையின் மிகப்பெரிய 'சூப்பர்ஸ்டார்' தருணம் போல் உணர்கிறேன். நம் அனைவரையும் பெரிய கனவுகளைக் காணக் கற்றுக் கொடுத்தவரிடமிருந்தே கிடைத்த ஆசிர்வாதம் போல் இது இருக்கிறது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத நன்றி சார். இது நேராக இதயத்தைத் தொடுகிறது. ஜெய் ஹிந்த்." என்று இயக்குநர் குறிப்பிட்டிருந்தார்.

நடிகர் ரஜினிகாந்த் மட்டுமின்றி, தென்னிந்தியாவைச் சேர்ந்த பல நடிகர்களும் திரைப்பட இயக்குநர்களும் ஆதித்யா தார் இயக்கிய இந்த படத்தை பாராட்டியுள்ளனர். மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர், விஜய் தேவரகொண்டா, மற்றும் எஸ்.எஸ். ராஜமௌலி ஆகியோர், 'துரந்தர் 2' படத்தின் மாபெரும் வெற்றிக்காக படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆதித்யா தார் இயக்கிய இந்தப் படம், இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் பாக்ஸ் ஆபிஸ் அள்ளி குவித்திருக்கிறது. இந்தப் படம், மிகப்பெரிய முன்பதிவுகளையும் முன்னெப்போதும் இல்லாத தேவையையும் சந்தித்து, அதன் விளைவாக வெளியான முதல் வார இறுதியில் சாதனை அளவிலான வசூலை ஈட்டியுள்ளது. வரலாற்றுச் சாதனையாக, 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' திரைப்படம் வெளியான முதல் வார இறுதியில் உலகளவில் 761 கோடி ரூபாய் வசூலித்து, இதுவரையிலான மிகப்பெரிய இந்திய பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இப்படம் பல முக்கியப் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களை விஞ்சி, பார்வையாளர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.