பொழுதுபோக்கு

“சாதி பேதம் எல்லா லேதய்யா” - தளபதி கச்சேரி என்ற பெயரில் ஜனநாயகன் படத்தின் முதல் பாடலை வெளியிட்ட படக்குழு!

ஒருத்தனும் வாறானே திருத்திட போறானே தங்கமே தளபதி ப்ளாஸ்டு ப்ளாஸ்டு...

Mahalakshmi Somasundaram

தனது படங்களின் வாயிலாக தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் நடிகர் விஜய். இவர் தற்போது முழுமையாக அரசியலில் இறங்கிய நிலையில் அடுத்து வெளியாக உள்ள ஜனநாயகன் படம் தான் இவரது கடைசி படம் என சொல்லப்படுகிறது. இவரது படங்களுக்கு பொதுவாகவே ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு அரசியல் வட்டாரங்களிலும் எதிர்பார்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.எச். வினோத் இயக்கும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்களுக்கு பல வெற்றி பாடல்களை கொடுத்த இளம் தலைமுறையை தனது இசையால் தன்வசப்படுத்தி வைத்திருக்கு அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

மேலும் இந்த படப்பிடிப்பின் வேலைகள் இறுதி கட்டத்திற்கு வந்த நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிரிபார்க்கப்படுகிறது. தீபாவளிக்கு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் கரூர் துயர சம்பவத்தால் படக்குழு வெளியீடு தேதியை தள்ளிவைத்ததாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது படத்தின் முதல் பாடலான “தளபதி கச்சேரி” பாடலை வெளியிட்டுள்ளது. இந்த பாடலை அறிவு, அனிரூத், மற்றும் விஜய் பாடியுள்ளனர், மேலும் இந்த பாடலில் விஜயுடன் பூஜா ஹெக்டே மற்றும் மாமித பைஜூ உள்ளிட்டோர் நடனமாடியுள்ளனர். 

இந்த படத்தில் பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். பாடலில் “ஹே ஒரு மாபெரு நாடு அதன் வேர்களில் நம்ம வியர்வை பாரு, மரம் மேல் ஒரு கூடு, அதன் தாய்வழி, சொந்தம் இந்த காடு, ஆவோ டூகெதர் பையா பையா, சாதி பேதம் எல்லா லேதய்யா, விங்கல் சினேகம் போல் மண்ணில் எங்கும் அண்ணன் கண்டில்லா ஓ செய்யா ஹே ஒருத்தனும் வாறானே திருத்திட போறானே தங்கமே தளபதி ப்ளாஸ்டு ப்ளாஸ்டு எங்கண்ணன் வி கச்சேரி” போன்ற வரிகள் இடப்பெற்றுள்ள நிலையில் படத்தில் அரசியல் அதிகமாக பேசப்படும் என்ற கருத்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.