

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நட்சத்திரமாகவே தொடருவது ரஜினியும் கமலும் தான். தமிழ் சினிமாவின் இரு துருவங்கள் என அறியப்படும் இருவரும் தங்களின் திரைப்பயணத்தின் ஆரம்ப காலங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்தனர். 16 வயதினிலே, ஆடு - புலி ஆட்டம், அவள் அப்படித்தான், தில்லு முல்லு, நினைத்தாலே இனிக்கும், அபூர்வ ராகங்கள், தப்பு தாளம், இளமை ஊஞ்சலாடுகிறது என பல படங்களில் இணைந்தும், சில படங்களில் கௌரவ வேடத்திலும் தோன்றியிருப்பார்கள்.
இவர்கள் இருவரையும் சினிமாவில் வார்த்தெடுத்தது, இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் தான், ஆகையால் ஒரு ஆசானின் கீழ் வளர்ந்த இரு ஆளுமைகளை தமிழ் சினிமா கொண்டாடத் தவறவில்லை. ஆனால் அதற்கு பிறகு மீண்டும் ரஜினியும் கமலும் எப்போது இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கியது. பலமுறை ரஜினியும் கமலும் ஒன்றாக சேர்ந்து நடிக்கவிருக்கின்றனர் என கிசுகிசுக்கள் வந்த வண்ணமே இருந்தன.
மீண்டும் இணையும் கமல் ரஜினி
இந்நிலையில் 44 ஆண்டுகள் கழித்து ரஜினியும் கமலும் இணைந்து பணியாற்ற உள்ளனர். அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவிருக்கும் படம் குறித்த அப்டேட் சில காலத்திற்கு பிறகு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் கமலின் ‘ராஜ் கமல்’ புரொடக்ஷன் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ளார். அந்த படத்தை சுந்தர் c இயக்குகிறார். 1997 -ஆம் ஆண்டு வெளியான ‘அருணாச்சலம்’ படத்திற்கு பிறகு, ரஜினியும் சுந்தர் c -யும் தற்போதுதான் இணைகின்றனர்.
28 ஆண்டுகளுக்கு பின் ஏன் மீண்டும் சுந்தர்!?
இதுகுறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த வலைப்பேச்சு அந்தணன் பேசுகையில், “தமிழ் சினிமாவின் மாபெரும் ஆளுமைகள் ஒரே புள்ளியில் இணைவது மிகவும் சந்தோஷமான விஷயம். ஆனால் சிலர் இப்படம் ‘அரண்மனை -5’ போல் இருக்கும் என சித்தரிக்கின்றனர். ஆனால் நிச்சயம் அப்படி இருக்காது. ஏனெனில் ரஜினியை கதை சொல்லி ஒப்புக்கொள்ள வைப்பது அத்தனை எளிது அல்ல. ‘அருணாச்சலம்’ போன்றொரு நல்ல கதையைத்தான் சுந்தர் c சொல்லியிருப்பார்.
மேலும் சமீபகாலமாக ரஜினியும் மிகவும் ‘dry’ -ஆன படங்களில் தானே நடித்து வருகிறார், ஒரே வெட்டுக்குத்து, ரத்தம், இதுபோன்ற படங்களின் பாணியே தொடருவது அவருக்கும் தொய்வை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் நீங்கள் சுந்தர்C படத்தை எடுத்துக்கொண்டால், கலகலப்பாக இருக்கும். இன்னைக்கும் சுந்தர்C படத்தில் இருக்க காமெடி வேறு எதில் உள்ளது. மேலும், இந்த கால இளைஞர்கள் லோகேஷ், நெல்சன், அருண் ஆகிய இயக்குனர்களின் படங்களை பார்த்து அவைதான் சினிமா என எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆகையால் இந்த தலைமுறை ஆட்களுக்கு சுந்தர்C பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என பேசியிருந்தார்.
ஆனால் இன்னும் சிலர் “இது வெறும் கமர்சியல் காமெடி படமாக இருக்காது. 2017, 2018 சமயங்களில், ‘சங்கமித்ரா’ எனும் பிரம்மாண்ட படத்தை எடுக்க சுந்தர் திட்டமிட்டிருந்தார். ஸ்ருதி ஹாசன், ஜெயம் ரவி, ஆர்யா உள்ளிட்டோரை முதன்மை கதாபாத்திரமாக்கி தனது கனவு படத்திற்கான வேலையில் இறங்கினார், ஆனால் சிலபல காரணங்களால் அப்படம் ‘கனவாகவே’ போய்விட்டது. இப்பொழுது மீண்டும் பல ஆண்டுகள் கழித்து ரஜினியுடன் இணையும் Sundhar C இம்முறை அந்த வாய்ப்பை நழுவ விடாமல், பிரம்மாண்ட படத்தை தருவார்” என்ற பேச்சுகளும் அடிபடுகின்றன.
ஆனால் அடுத்தடுத்து Sundar C -க்கு விஷால் படம், மூக்குத்தி அம்மன் 2 -என லைன் அப் -கள் உள்ளன. ஆனால் அவை யாவும் ரஜினி படத்திற்காக காத்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.