பொழுதுபோக்கு

“மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன ஈகோ?” - கர்நாடக உயர்நீதிமன்றம் .. ஒத்திவைக்கப்பட்ட “THUG LIFE” படத்தின் ரிலீஸ்!

படத்தை வெளியிட கோரி கர்நாடக நீதிமன்றத்தில் கமல்

Mahalakshmi Somasundaram

கமல் நடித்த “THUG LIFE” படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை செய்ய கோரி பிரச்சனைகளை வெடித்த நிலையில், படத்தை வெளியிட கோரி கர்நாடக நீதிமன்றத்தில் கமல் மனு தாக்கல் செய்திருந்தார். 

இதற்கு மன்னிப்பு கேட்ட பிறகே தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது விசாரணை நடத்தப்படும். என்று கர்நாடக நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் (மே 24) நடந்த “THUG LIFE” இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கமல்ஹாசன் மொழி குறித்து பேசிய கருத்து பெரும் பிரச்சனையாக வெடித்து  “THUG LIFE”  திரைப்படம் கர்நாடகாவில் வெளியிட தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை எதிர்த்தும் திரைப்படத்தை வெளியிட கோரியும் கமல்ஹாசன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் கர்நாடக நீதிமன்றம் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்து கேள்வி எழுப்பியுள்ளது. அதில் எந்த அடிப்படையில் தமிழ் மொழியிலிருந்து கன்னட பிறந்தது என்று கூறுகிறீர்கள் அதை பற்றி பேச மொழியியல் ஆராய்ச்சியாளரா நீங்கள்? யாராக இருந்தாலும் கர்நாடக மக்களின் மனதை புண்படுத்தியது தவறு. எனவே மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கு விசாரிக்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கமலஹாசன் கர்நாடக திரைப்பட வர்த்தக சபாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் “நான் பேசிய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது எனக்கு வருத்தமளிக்கிறது.  கன்னட மொழியை இழிவு படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. இந்தியாவின் அனைத்து மொழிகளின் மீதும் எனக்கு பிணைப்பு உள்ளது, ஒரு மொழி மற்றொரு மொழி மீது ஆதிக்கம் செலுத்துவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். கர்நாடக மக்களும் தமிழ் மக்களும் குடும்பத்தார் என்பதை தான் நான் அப்படி சொல்ல வந்தேன். சினிமா என்பது மக்களை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டுமே தவிர மக்களை பிரிக்கக்கூடாது” என கூறியுள்ளார். 

கர்நாடக திரைப்பட வர்த்தக சபாவிற்கு கமல் எழுதிய கடிதம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி  “மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன ஈகோ? பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்பதை விடுத்து என் சுற்றி வளைத்து பேசுகிறார். கர்நாடக மக்களின் உணர்ச்சியை கமல் குறைத்து மதிப்பிடுகிறார். கடிதத்தில் என் ஒரு இடத்தில கூட மன்னிப்பு என்ற வார்த்தை இல்லை” என கேள்வி எழுப்பி உள்ளார். 

இந்த நிலையில் கர்நாடகாவில் ஜூன் 5 ஆம்  தேதி படம் வெளியிடப்பட இருந்த “THUG LIFE” திரைப்படம் ஜூன் 10 தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்