"எனது அன்பான சகோதரர் அஜித்துக்கு.." - லண்டனில் CM விஜய் கொடுத்த பரிசு என்ன? 
பொழுதுபோக்கு

அஜித்துக்கு ரேஸ் கார் பரிசளித்த விஜய்.. “எனது அன்பான சகோதரருக்கு” - நெகிழ வைத்த பரிசு!

அஜித்தும் விஜய்யும் ரசிகர்களை நோக்கிச் கையசைத்த வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.

மாலை முரசு செய்தி குழு

நடிகர் அஜித் கலந்துகொண்ட லண்டன் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்ற லீ மான்ஸ் கார் பந்தயத்தை கொடியசைத்துத் தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய்.

இந்த நிகழ்வு தமிழகத் திரையுலகிலும் அரசியலிலும் பேசுபொருளாகியுள்ளது. நீண்ட நாட்களாகத் திரையுலகில் போட்டியாளர்களாக இருந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் நண்பர் என்றே அழைத்துக்கொண்டனர். அந்த நட்புக்கு சான்றாக, லண்டனில் அஜித்தை சந்தித்ததும் முதலமைச்சர் விஜய் ஓடிச் சென்று கட்டியணைத்த நிகழ்வு அமைந்தது.

விஜய்யுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அவரது ஆலோசகர் விஷ்ணு ரெட்டியும் லண்டன் சென்றிருந்தனர்.

அஜித்தும் விஜய்யும் ரசிகர்களை நோக்கிக் கையசைத்த வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.

அஜித், பிரெஞ்சு கார் பந்தய வீரர் ரோமைன் வோஸ்னியாக்குடன் இணைந்து, ‘அஜித் ரெட் ஆன்ட் பை விராஜ்’ அணிக்காக LMP3 Pro/Am பிரிவில் போட்டியிட்டார்.

பந்தய முடிவுக்குப் பிறகு, ரேஸ் குறித்து அஜித்குமார் முதல்வர் விஜய்க்கு விளக்கமளித்தார். பின்னர், விஜய்யும் ரேஸிங் சூட் ஒன்றை அணிந்துகொண்டு, அஜித்துடன் இந்தியக் கொடியைப் பிடித்தவாறு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.

இதையடுத்து, விஜய் ஒரு சிறிய ரேஸ் காரை அஜித்துக்குப் பரிசாக வழங்கினார். அதில், “பிரியமுடன் (With Love) விஜய், எனது அன்பான சகோதரர் அஜித்துக்கு” என்று மனதைத் தொடும் வகையில் கையெழுத்திட்டிருந்தார். அதேபோல், அஜித் விஜய்க்கு ஹெல்மெட் ஒன்றைப் பரிசாக வழங்கினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்