ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்திய விஜய்  ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்திய விஜய்
பொழுதுபோக்கு

ஜீவாவை கட்டியணைத்து ஆறுதல் கூறிய விஜய்! - ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு நேரில் சென்று மரியாதை

மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது சென்னை இல்லத்திற்கு விஜய் வருகை தந்தார்.

Vinvizhi Leninton

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய தவெக தலைவர் விஜய், ஜீவாவின் தந்தையும் மூத்த தயாரிப்பாளருமான ஆர்.பி. சௌத்ரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக மே 6 அன்று ஜீவாவின் இல்லத்திற்குச் சென்றார்.

நேற்றைய தினம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கார் விபத்தில் சிக்கி தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி மரணமடைந்தார். மே 4 அன்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், விஜய்யின் கட்சியான தமிழக வெற்றி கழகம் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்து சில மணி நேரத்திலேயே சென்றுள்ளார். மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது சென்னை இல்லத்திற்கு விஜய் வருகை தந்தார். தென்னிந்தியத் திரையுலகில் ஒரு முக்கிய தயாரிப்பாளராக விளங்கினார் ஆர்.பி. சௌத்ரி. தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர் பல புதுமுக இயக்குநர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், பல தயாரிப்பளர்களும் தயங்கும் பல கதைகளை படமாக தயாரித்துள்ளார்.

நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தும் வகையில், ஆர்.பி. சௌத்ரியின் உடல் மே 6 ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை அவரது மயிலாப்பூர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. திரையுலகின் பல பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இயக்குநர் சங்கர் இயக்கிய 'நண்பன்' திரைப்படத்தின் மூலம் ஜீவாவுடன் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, ஆரம்பகாலத்தில் விஜய்யின் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனைப் படமாக அமைந்த ' பூவே உனக்காக' படத்தை தயாரித்தது ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பு நிறுவனம்தான். மாலையில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஆர்.பி. சௌத்ரியில் உடலுக்கு மலையணிவித்து கண்கலங்கினார் விஜய். மேலும், மனமுடைந்த நிலையில் இருந்த நடிகரும் ஆர்.பி. சௌத்ரி மகனுமான ஜீவாவை கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.