விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெட்ரா நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் திடைப்படத்தை இயக்கிய இயக்குநர் பாலாஜி தரணீதரன், மீண்டும் 3வது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து “பத்தா” என்ற திரைபடத்தை இயக்கியுள்ளார். அட்லீ தயாரிப்பில் உருவாகியுள்ள பத்தா அக்டோபர் 1ம் தேதி வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
அதில் திரைப்படத்தைக் குறித்தும், தயாரிப்பாளராக தனது அனுபவத்தை குறித்து பேசியிருந்தார். இதற்கிடையில் நடிகரும் தமிழக முதல்வருமான விஜய்யுடனான அனுபவத்தையும் பகிர்ந்திருந்தார். அவர்பேசியதாவது, “நான் அணிந்திருக்கும் சட்டை பேண்ட் வாட்ச் இதெல்லாம் என் உழைப்பில் கிடைச்சதுன்னு நான் நினைச்சாலும் என் அண்ணன் தளபதி இல்லன்னா சான்சே கிடையாது. ராஜாராணி படத்தை இயக்கிய பின் பிரபலமானேன்.. ஆனாலும் எனக்கு அடுத்தடுத்து வாழ்க்கை கொடுத்தது விஜய் தான்” என்றும் குறிப்பிட்டார்.
இது நான் மேடைக்கு மேடை விஜய் அண்னனை பற்றி பேசுறனு.. அப்படில்லாம் நினைக்காதீங்க இன்னொரு படம் கொடுப்பாருன்னு பேசல.. இன்னொரு படம் எல்லாம் அவர் கொடுக்க மாட்டாரு, அவர் CM ஆயிட்டாரு” என்று பேசியதும் அரங்கத்தில் கைத்தட்டல்கள் அதிகமாகின.
ஊர்வாய அடக்க முடியாது ஆனா ஊர்வாயில விழுந்தவன நம்பி வாழறது அதவிட முட்டாள்தனம். ஊர் ஆயிரம் பேசும் நான் ஒரு குட்டிகதை சொல்கிறேன் என்று தொங்கிய அட்லீ “துணி துவைக்கும் நபர் ஒருவர். கழுதை மீது அழுக்கு துணி மூட்டையை வைத்து சென்றார். அந்த ஊரில் ஒருவர் 'ஐந்தறிவு ஜீவன் மீது மூட்டையை வைத்து துன்புறுத்துகிறாயே என கூறினார். இதனால், அந்த நபர் தனது தலையில் துணி மூட்டையை வைத்து சென்றார். அடுத்த ஊரில் உள்ளவர்கள் 'கழுதை இருக்கும் போது தலையில் மூட்டையை வைத்து செல்கிறாயே.. அறிவிருக்கிறதா' என கேள்வி எழுப்பியுள்ளனர்” என முடித்தார். கதையிலிருந்து "எவன் என்ன சொல்கிறான் என்பதையெல்லாம் கேட்காதீர்கள்’’ என்றும் “சின்ன சின்ன பொறிகளில் சிக்கிவிடாதீர்கள்" என்றும் அறிவுறுத்தினார். "சோசியல் மீடியாக்களில் இவர் அவரை சொல்கிறார், அவர் இவரை சொல்கிறார் என்பதெல்லாம் இல்லை; எதை சொல்ல வேண்டும் என்றாலும் நேரடியாக சொல்லலாம் என்று மறைமுகமாக சாடியிருந்தார்.
தெடர்ந்து பேசிய அவரை அடுத்த தலைமுறையினர் அரசியலில் திடமாக இருப்பார்கள்.. என்றும் அதுக்கு ஒரே காரணம் விஜய் தான் என்று குறிப்பிட்டார். எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் கிடையாது, ஆனா ஒன்னு சொல்றேன் இந்த தலைமுறையில் சட்டசபையில என்ன நடக்குதுன்னு 5வயது குழந்தை உட்காந்து பாக்குது.. விஜய் அண்ணா ஒரு திடமான தலைமுறையை உருவாக்கியுள்ளார் என்று குறிப்பிட்டார்.
சமீபத்தில் விஜய் சேதுபதி தொகுத்து வழக்கும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமை பண்பு குறித்து பேசினார். அவர் குறிப்பிட்ட கருத்துக்கள் முதல்வர் விஜயை குறிப்பதாக இணையத்தில் விவாதங்கள் எழுந்தன. மேலும் அட்ரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளானது. தற்போது விஜய் குறித்து இயக்குனர் அட்லீ பேசியது விஜய் சேதுபதிக்கு மறைமுகமாக பதிலடி கொடுக்கும் விதமாக இருப்பதாக தெரிகிறது. இணையத்திலும் இந்த பேச்சுக்கள் வைரல் ஆகியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்