Allu Arjun Rajinikanth tweet 
பொழுதுபோக்கு

"ஒருநாளாவது எங்களுக்கு இப்படி பேசிருப்பீங்களா?".. ரஜினிக்கு Elevation கொடுத்த அல்லு அர்ஜுன்.. பொங்கிய சிரஞ்சீவி ரசிகர்கள்!

சிரஞ்சீவிக்கும் ரஜினிகாந்துக்கும் இடையேயான ஒப்பீடுகள் ஏற்கனவே ரசிகர்களிடையே விவாதிக்கப்பட்டு வரும் நிலை..

Vinvizhi Leninton

சமீபத்தில் 'ஜெயிலர் 2' திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் திரைப்படத்தை குறித்த தனது கருத்தினையும், படக்குழுவை வாழ்த்தியும் நடிகர் அல்லு அர்ஜுன் போட்ட ஒரு 'ட்வீட்' இப்போது ரசிகர்கள் மத்தியில் பூதாகரமாக வெடித்துள்ளது.

கடந்த அக்டோபர் 15-ம் தேதி வெளியாகி இன்றுவரை வெற்றிநடைபோட்டுக்கொண்டிருக்கும் திரைப்படமாக உள்ளது 'ஜெயிலர் 2'. இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ஆகியோர் ரசிகர்களை தங்களது பக்கம் ஈர்த்து வைத்துள்ளனர்.

மேலும், ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் கூட தங்களது 'ஃபேன் மொமெண்ட்டுகளை' தங்களது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், 'ஜெயிலர் 2' ரசிகர்கள் வரிசையில் 'ஸ்டைலிஷ் ஸ்டார்' அல்லு அர்ஜுன் 'சூப்பர் ஸ்டார்' ரஜினி காந்த் மற்றும் படக்குழுவை பாராட்டி ஒரு பதிவினை தனது X தளத்தில் பதிவிட்டார்.

Allu Arjun Rajinikanth tweet

அதில் அவர், "ரஜினிகாந்த் சாரின் நட்சத்திர அந்தஸ்து, ஸ்டைல் ​​மற்றும் வசீகரத்தின் உண்மையான எடுத்துக்காட்டு!. அட்ரினலினை அள்ளித் தெளிக்கும் ஒரு கமர்ஷியல் என்டர்டெய்னர்!. சகோதரரே... அனிருத் கலக்கிவிட்டீர்கள்!. அனைத்துக் கலைஞர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும், தயாரிப்பாளரும் இந்தப் படத்தில் தங்களின் முழு மனதையும் கொட்டியுள்ளனர். 'ஷோமேன்' நெல்சன் திலீப்குமார் சார் ஒரு அட்டகாசமான ஹிட்டை வழங்கியுள்ளார்!. சட்டைக் கூட கசங்காமல் 500 கோடி அடிக்க ரஜினியால் மட்டுமே முடியும்!. முழு அணிக்கும் வாழ்த்துக்கள்!" என்று அவர் தனது X தளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவுதான் தற்போது இந்த 'ஃபேன் வார்க்கு' காரணமாக அமைந்துள்ளது. அதாவது, அந்த முழு ஆங்கில ட்வீட்-டில் அல்லு அர்ஜுன் தெலுங்கில் குறிப்பிட்ட "சட்டைக் கூட கசங்காமல் 500 கோடி அடிக்க ரஜினியால் மட்டுமே முடியும்!. முழு அணிக்கும் வாழ்த்துக்கள்!" என்று பதிவிட்டதுதான் பேசுபொருளாகியுள்ளது. சிரஞ்சீவிக்கும் ரஜினிகாந்துக்கும் இடையேயான ஒப்பீடுகள் ஏற்கனவே ரசிகர்களிடையே விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இவரது இந்த பதிவானது "ஒருநாளாவது எங்களுக்கு இப்படி பேசிருப்பீங்களா?" என்ற கேள்வியை 'மெகா ஸ்டார்' ரசிகர்களிடம் எழுப்பியுள்ளது.

மேலும், தற்போது சீரஞ்சீவியின் ரசிகர்களும் அல்லு அர்ஜுனின் ரசிகர்களும் காரசாரமாக விவாதம் நடத்தி, இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் சண்டையிட்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.