கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்மத்துகோணம் பகுதியில் விஐபி கார்டன் அமைந்துள்ளது. இந்த விஐபி கார்டனில் பல்வேறு தரப்பினர் புதுமனை வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். அதன் சுற்றுவட்டார பகுதியில் தனியார் காவலர்கள் கண்காணித்து வருகின்றனர். இங்கு பிரபல யூடியூபர் வினோத்குமார் - மதுமிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு மர்ம கும்பல் வினோத் குமார் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கு 118 சவரன் தங்க நகை மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த youtube தம்பதியினர் தங்களது யூடியூபில் அதிக அளவு நகை மற்றும் கட்டு கட்டாக பணத்துடன் மகிழ்ந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நகைக்கடைக்கு போவது நகை வாங்குவது போன்ற விலாக் (vlog) செய்து பதிவிட்டு வருவார்கள். அதில் எங்கு செல்கிறார்கள் எவளவு நகை வாங்குகிறார்கள், காரின் மதிப்பு என்ன? பேங்க் பேலன்ஸ் மதிப்பு குறித்தெல்லாம் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார் மதுமிதா. பலரும் கமெண்டில் மதுமிதாவை திட்டி தீர்த்துவருவார்கள். இப்போது இந்த திருட்டு செய்தி நெட்டிசன்களிடையே விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது
இவர்கள் வசித்து வந்த கார்டனில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் உள்ள அனைவரும் மிகவும் பிரபலமான விஐபிகள் என்பதால் அனைத்து வீடுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக வசித்து வரும் இந்த பகுதியில் சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ள இந்த இடத்தில் கொள்ளை நடந்தது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்