

டார்க் ஹெவன் திரைப்படத்தில் நடித்துள்ள யூடியூபர் பிரதீப், முதலமைச்சர் சட்டமன்றத்தில் செய்தது போன்ற செய்கையை செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இயக்குநர் பாலாஜி இயக்கத்தில், நடிகர்கள் சித்து, ரித்விகா, 'பிக் பாஸ்' தர்ஷிகா ஆகியோர் நடிப்பில் உருவான படம் 'தி டார்க் ஹெவன்'.
இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபிள் மனைவி மினியுடன் சேர்ந்து சேனல் நடத்தி வருகிறார் இவர். சாஃப்ட்வேரில் பணியாற்றி வந்த இவர், இப்போது முழு நேர கிரியேட்டராக உள்ளார். பிரதீப்பின் மனைவி மினி கேரளத்தைச் சேர்ந்தவர் என்பதனால் இவருக்கு தமிழ் மற்றும் மலையாளம் இரண்டு மொழிகளிலும் பின் தொடர்பவர்கள் உள்ளனர்.
பிராங்க் செய்வது முதல் ஹோம் டூர் வரை, வளைகாப்பு முதல் குழந்தையை பிக்னிக் அழைத்து செல்வது வரை தம்பதியாக சேனல் நடத்துபவர்களுக்கு கேட்டலாக்காக கன்டன்ட் செய்து வருகின்றனர் மினியும் பிரதீப்பும்.
பிரதீப் முதல்முறையாக டார்க் ஹெவன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகியிருக்கிறார். கடந்த வாரம் வெளியான இந்த படத்தின் வெற்றிவிழா நேற்றையதினம் சென்னையில் நடைபெற்றது.
இதில் பேசிய பிரதீப், "இந்த படத்தை நல்ல இடத்துக்கு கொண்டு போயிருக்கீங்க. உங்களுக்கு நாங்க கடமை பட்டிருக்கிம். இந்த வாரமும் அந்த மாதிரி நல்ல ரீச் கிடைக்கும் என நம்புகிறோம்.
நான் ஒரு யூடியூபர், இதுதான் என் முதல்படம். நான் படம் நடிக்கப் போவதாக இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டோரி பதிவிட்டிருந்தேன். அதில் பலரும் 'என்ன யூடியூபில் இருந்து நடிக்க வந்துவிடுகிறீர்கள்.. உங்களுக்கு என்ன தெரியும்?' எனக் கேள்வி எழுப்பினர். அவர்களுக்கு எல்லாம் நான் ஒரு சைகை செய்ய விரும்புகிறேன்." எனப் பேசிவிட்டு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் செய்தது போல சைகை செய்தார்.
இந்த நடவடிக்கை நெட்டிசன்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. 'யூடியூபில் சிறப்பாக கன்டன்ட் செய்து வருபவர், புதிதான சினிமா துறைக்கு மாறும்போது சில கேள்விகள் விமர்சனங்கள் எழுவது சாதாரணமே.
அவற்றுக்கு முறையாக பதில் சொல்லியிருக்கலாம். அல்லது நம் நடிப்பே பதிலாக இருக்கும் என கடந்திருக்கலாம். ஆனால் விமர்சனம் செய்பவர்களை நோக்கி இதுபோன்ற சைகைகளை செய்வது தலைகணமாக இல்லையா?' எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முதல் படத்தின் விழாவிலேயே இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது, குக் வித் கோமாளி அஸ்வினை நினைவுபடுத்துவதாக பலரும் கூறி வருகின்றனர். ஒரு படத்தில் ஹீரோவாக நடித்த அவர், இசை வெளியீட்டு விழாவில், "நான் கதை கேட்டுக்கொண்டிருக்கும்போதே தூங்கி விடுவேன்" எனப் பேசி எல்லாராலும் கண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்