நம்ம உடம்புல முக்கால்வாசி தண்ணிதான் இருக்குன்னு பெரியவங்க சொல்லுவாங்க. ஆனா இன்னைக்கு இருக்குற அவசரத்துல நாம தண்ணி குடிக்கிறதையே ஒரு வேலையா நினைச்சு மறந்துடுறோம். தாகம் எடுத்தா மட்டும் ஒரு வாய் தண்ணிய குடிச்சிட்டு அப்படியே போயிடுறோம். ஆனா, உண்மைய சொல்லப்போனா நம்ம உடம்புல வர்ற பாதி நோய்க்கு காரணம் சரியான அளவு தண்ணி குடிக்காததுதான். தண்ணிங்கிறது வெறும் தாகத்தை தீர்க்குறதுக்கு மட்டும் இல்ல, நம்ம உடம்புல இருக்குற ஒவ்வொரு உறுப்பும் சரியா வேலை செய்யுறதுக்கு அந்த தண்ணிதான் எரிபொருள் மாதிரி. சரியான முறையில தண்ணி குடிச்சாலே போதும், நீங்க எந்த டாக்டர்கிட்டயும் போக வேண்டிய அவசியமே இருக்காது.
முதல்ல காலையில எந்திரிச்சதும் வெறும் வயித்துல ஒரு ரெண்டு டம்ளர் தண்ணி குடிக்கிறதை ஒரு வழக்கமா வச்சுக்கோங்க. இது ஒரு "மேஜிக்" மாதிரி வேலை செய்யும். ராத்திரி முழுசும் நம்ம உடம்பு ஓய்வு எடுக்கும்போது தங்கியிருக்கிற நச்சுக்கள் எல்லாம் காலையில இந்த தண்ணி குடிக்கும்போது அப்படியே வெளியேறிடும். இது உங்க குடலை சுத்தமாக்கி, மலச்சிக்கல் பிரச்சனையே இல்லாம பாத்துக்கும். வயிறு சுத்தமா இருந்தாலே பாதி நோய் நம்மளை விட்டு போயிடும். அதே மாதிரி நிறைய பேருக்கு இருக்குற ஒரு பெரிய பிரச்சனை இந்த முடி கொட்டுறதும், தோல் சுருக்கமும் தான். அதுக்கு நாம என்னென்னமோ கிரீம் போடுறோம், ஆனா ஒரு நாளைக்கு மூணு லிட்டர் தண்ணி குடிச்சு பாருங்க, உங்க முகம் தானாவே பளபளன்னு மாறும். தோல் சுருக்கம் வராது, ஸ்கின் நல்லா டைட்டா இருக்கும்.
அப்புறம் இந்த வெயில் காலத்துல தலைவலி வரதுக்கு முக்கிய காரணமே உடம்புல தண்ணி சத்து குறையுறதுதான். நாம வேலை செஞ்சுட்டே இருக்கும்போது உடம்பு சூடாகிடும், அப்போ தண்ணி குடிச்சா தான் உடம்பு குளிர்ச்சியாகி மூளை சுறுசுறுப்பா வேலை செய்யும். அதே மாதிரி இந்த கிட்னி ஸ்டோன் அதாவது சிறுநீரக கல் பிரச்சனை வராம இருக்கணும்னா தண்ணி தான் ஒரே மருந்து. தண்ணி நிறைய குடிக்கும்போது சிறுநீரகம் நல்லா கழுவப்பட்டு, கழிவுகள் எல்லாம் வெளியேறிடும். ஆனா ஒன்னு, தண்ணி குடிக்கும்போது அண்ணாந்து குடிக்காம, ஒரு இடத்துல உக்காந்து நிதானமா ரசிச்சு குடிக்கணும். அப்போதான் அந்த தண்ணி நம்ம உடம்போட முழுசா சேரும்.
ரொம்ப முக்கியமான விஷயம் என்னன்னா, சாப்பிடும்போது இடையில இடையில நிறைய தண்ணி குடிக்கவே கூடாது. அப்படி குடிச்சா நம்ம உடம்புல சுரக்குற செரிமான நீர் நீர்த்துப் போயிடும், அப்புறம் சாப்பாடு சரியா ஜீரணம் ஆகாது. சாப்பிடுறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடியும், சாப்பிட்டு முடிச்சு ஒரு அரை மணி நேரம் கழிச்சும் தண்ணி குடிக்கிறது தான் சரியான முறை. அதே மாதிரி ஐஸ் தண்ணிய குடிக்கிறதை விட, சாதாரண பானைத் தண்ணி இல்லனா வெதுவெதுப்பான தண்ணி குடிச்சா உடம்புக்கு ரொம்ப நல்லது. ஒரு நாளைக்கு குறைஞ்சது 8 லிருந்து 10 கிளாஸ் தண்ணி குடிக்கிறதை ஒரு கடமையா வச்சுக்கோங்க. காசு செலவில்லாத இந்த மருந்தை நீங்க சரியா பயன்படுத்தினா, இளமையாவும் ஆரோக்கியமாவும் ரொம்ப காலம் வாழலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.