viral buffalo viral buffalo
லைஃப்ஸ்டைல்

"என்ன ஒரு ஆச்சர்யம்" டிரம்ப்பை போலவே இருப்பதால் கவனம் ஈர்க்கும் எருமை! - 'உள்ளூர் சுற்றுலா தலமாக மாறிய பண்ணை'

அல்பினோ எருமை, பார்ப்பதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போல தோற்றமளிப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Vinvizhi Leninton

வங்கதேசத்தில் உள்ள ஒரு அரிய வகை அல்பினோ எருமை, பார்ப்பதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போல தோற்றமளிப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “டொனால்ட் டிரம்ப்” என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஈத் அல்-அதா பண்டிகையை முன்னிட்டு நாராயண்கஞ்ச் பகுதியில் இந்த எருமை பார்வையாளர்களின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுமார் 700 கிலோ எடையுள்ள இந்த அல்பினோ எருமை, பைக்பாரா பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் வளர்க்கப்பட்டு வருகிறது. அதன் தலையில் காணப்படும் பொன்னிற முடி மற்றும் முக அமைப்பு, டொனால்ட் டிரம்பின் தோற்றத்தை ஒத்திருப்பதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இதன் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், பலர் அந்த எருமையை நேரில் காண பண்ணைக்கே நேரடியாக சென்று வருகின்றனர்.

பண்ணை உரிமையாளர் ஜியாவுதீன் மிருதா கூறுகையில், “அதன் தலையில் இருந்த வித்தியாசமான முடியைப் பார்த்த என் தம்பி நகைச்சுவையாக ‘டொனால்ட் டிரம்ப்’ என்று பெயர் வைத்தார். ஆனால் பின்னர் அந்த பெயரே பிரபலமாகிவிட்டது,” என்று கூறியுள்ளார். மேலும், “இந்த எருமை மிகவும் அமைதியான குணம் கொண்டது. அல்பினோ எருமைகள் பொதுவாக சாந்தமாகவே இருக்கும். அவற்றை சீண்டாத வரை அவை ஆக்ரோஷமாக மாறாது,” என்றும் தெரிவித்தார். ஈத் அல்-அதா பண்டிகைக்கு முன்பே இந்த எருமை விற்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டாலும், அதை காண பொதுமக்கள் தொடர்ந்து பண்ணைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த எருமையை நேரில் பார்த்த பலரும், அது உண்மையிலேயே டிரம்பை ஒத்திருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். முதலில் சமூக வலைதளங்களில் பார்த்தபோது நம்பவில்லை. ஆனால் நேரில் பார்த்தபின், அதன் முக அமைப்பும் தலைமுடியும் டிரம்பைப் போலவே இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில், அந்தப் பண்ணையில் உள்ள மற்றொரு எருமைக்கும் Benjamin Netanyahu பெயர் சூட்டப்பட்டுள்ளது. 750 கிலோ எடையுள்ள அந்த எருமை, மிகவும் சுறுசுறுப்பாகவும் குறும்புத்தனமாகவும் இருப்பதாக பண்ணைத் தொழிலாளர்கள் கூறுகின்றனர். இந்த இரண்டு எருமைகளும் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அந்தப் பண்ணை தற்போது உள்ளூர் சுற்றுலா ஈர்ப்பிடமாக மாறியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.