அரிசி பொதுவாகவே முக்கியமான ஒரு உணவு பொருளாக பார்க்கப்படுகிறது. பல்வேறு நாடுகளில் சோறு (சமைத்த அரிசி) ஒரு முக்கியமான உணவுப்பொருளாக இருந்து வருகிறது. இதனை ஒரு முறை சமைத்தால் மோதும், மீண்டும் மீண்டும் கூட சூடுபடுத்தி உட்கொண்டு விடலாம் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினால் கூட இதை பலரும் இதை யோசித்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதில் யாரும் விதிவிலக்கல்ல. ஆனால் அவ்வாறு சாப்பிடுவது என்பது உடலுக்கு பல தீங்குகளை விளைவிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
வேகவைத்த அரிசியை நீண்ட நேரம் அறை வெப்பநிலையில் வைத்திருந்தால், பேசிலஸ் செரியஸ் (Bacillus cereus) என்ற பாக்டீரியா வளர வாய்ப்பு உள்ளது. அவை ஆபத்தான நச்சுக்களை உருவாக்கி ஃபுட் பாய்சனுக்கு வழிவகுக்கும். அதன் காரணமாக குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். மேலும் உணவு விஷயமாக மாறும் அபாயமும் ஏற்படுகிறது. மற்ற உணவு பொருட்களை சூடாக்கும் போது பாக்டீரியாக்கள் அழிய வாய்ப்பிருக்கிறது. ஆனால் அரிசியை பொறுத்தவரை அவ்வாறு இல்லை. அரிசியை வேக வைக்கும் போது பேசிலஸ் செரியஸ் என்ற பாக்டீரியாக்கள் உருவாகிறது. அதனை, அறை வெப்பநிலையில் விடும்போது, அதன் எண்ணிக்கை பெருகுகிறது. மேலும் மீண்டும் சாதத்தை சூடேற்றும் போது நச்சு பொருட்கள் கொல்லப்படுவதில்லை. இதனால் உடலில் பல உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாகவே, இவை அதிக வெப்பத்தை தாங்கும் திறனை கொண்டிருப்பதால், சமைக்கும் போது இந்த பாக்டீரியாக்கள் இறப்பது கிடையாது.
இதுமட்டுமின்றி சாதத்தை மீண்டும் சூடுபடுத்துவதால் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படுகின்றன. மீண்டும் மீண்டும் வெப்பத்திற்கு உட்படுத்தும்போது வைட்டமின் மற்றும் தாதுக்கள் குறைபாடு ஏற்படுகிறது, இதனால் அதை உட்கொள்ளுபவருக்கு குறைந்த ஊட்டச்சத்து அளவே உடலுக்கு கிடைக்கிறது. கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஆற்றலுக்காக அரிசியை மட்டுமே நம்பியிருப்பவர்களுக்கு இது கைகொடுக்காது. மேலும், மீண்டும் சூடுபடுத்தப்பட்ட அரிசி என்பது கடினமானதாகவும், உலர்ந்ததாகவும் மாறும், இதனால் ஜீரணிக்க கடினமாகி, வீக்கம் அல்லது வயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்தும். மேலும் அரிசி ஒரே மாதிரியான அளவில் சூடாக வாய்ப்பில்லாததால் குளிர்ச்சியான பகுதிகளில் உள்ள பாக்டீரியாக்கள் மேலும் வளர வாய்ப்பிருக்கிறது.
சரி, இந்த பேசிலஸ் செரியஸ் என்றால் என்ன? பேசிலஸ் செரியஸ் என்பது கிராம்-பாசிட்டிவ், தடி வடிவ, ஸ்போர் உருவாக்கும் பாக்டீரியா ஆகும். இது மண், தண்ணீர், காற்று, அரிசி தானியங்கள் போன்றவற்றில் இயற்கையாகவே காணப்படும் ஒன்றாகும். முக்கியமாக சமைத்த அரிசியில் உணவு நச்சுத்தன்மையை ஏற்படுத்துவதில் முக்கியமானது. இது அரிசியில் மட்டுமில்லாது பாஸ்தா, நூடுல்ஸ், பூண்டு, கத்தரிக்காய், பால், பாலாடைக்கட்டி போன்றவற்றிலும் பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக, 4°C வெப்பநிலையில் இந்த பாக்டீரியாவின் வளர்ச்சி நின்றுவிடுகிறது.
யாருக்கு பாதிப்பு: இதுபோன்று அடிக்கடி சூடுபடுத்தி உண்பவர்களின் உடலில் உபாதைகள் ஏற்படும், அதிலும் குறிப்பாக கர்ப்பிணிகள், சிறு குழந்தைகள், எதிர்ப்பு சக்தி குறைவான வயதானவர்கள், நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய் உள்ளவர்கள். இவர்கள் எல்லாம் சாதத்தை சூடாக்கி சாப்பிட்டு ஃபுட் பாய்சன் ஏற்பட்டால், உடலில் பாதிப்பு மோசமானதாக மாற வாய்ப்புள்ளது. பாதுகாப்பாக வேகவைத்த அரிசியை உண்ண வேண்டும் என்றால், நன்றாக சமைத்து உடனே உண்டுவிடுவது நல்லது, மீதி இருந்தால் அடுத்த நாள் காலைக்கு மட்டும் சூடாக்கிக்கொள்ளலாம். ஃப்ரை ரைஸ் (Fried rice) செய்யும்போது புது எண்ணெய் சேர்த்து 74°C வரை சூடாக்கி சமைக்கலாம்.
இது போன்ற அத்தியாவசிய பொருளான அரிசியில் இருந்து உருவாகும் பாக்டீரியாவில் இருந்து பாதுகாக்க, சமைத்த சிறிது நேரத்திலேயே சாதத்தை குளிர்வித்து விடுவது மற்றும் சமைத்த அரிசியினை அடுத்தநாள் சூடுசெய்து சாப்பிடுவது, சமைத்த உடனே சாப்பிட்டு விடுவது போன்றவற்றால் பாதிப்பை தவிர்க்கமுடியும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.