லைஃப்ஸ்டைல்

மன அழுத்தத்திற்கு மருந்தாகும் தயிர்.. தினமும் உணவில் தயிர் சேர்த்துக் கிட்ட இவ்வளவு நன்மையா?

உணவு சரியாக உடைக்கப்பட்டு ஊட்டச்சத்துக்கள் உடலில் உறிஞ்சப்பட உதவுகின்றன...

மாலை முரசு செய்தி குழு

தயிர் நமது தமிழ் வீடுகளின் அன்றாட உணவில் இடம் பிடித்திருக்கும் ஒரு சாதாரணமான, ஆனால் நம்மை ஆச்சரியப்படுத்தும் ஒரு ஆரோக்கியமான உணவு. பிரியாணி, முதல் தயிர் சாதம் வரை பெரும்பாலான உணவுகளில் தயிர் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. வெறும் சுவைக்காக மட்டுமல்லாமல், உடலுக்கு ஏராளமான நன்மைகளை அள்ளித் தருகிறது. சமீப கால ஆய்வுகள் தயிரை ஒரு 'சூப்பர்ஃபுட்' என்று குறிப்பிடுகிறது. இந்த தயிரை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நமது உடலில் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும்

வயிற்றுக்கு தயிர் தரும் பெரும் உதவி தயிரில் உள்ள புரோபயாடிக்ஸ் நமது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்து, செரிமானத்தை சீராக்குகின்றன. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அஜீரணம் போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதோடு, உணவு சரியாக உடைக்கப்பட்டு ஊட்டச்சத்துக்கள் உடலில் உறிஞ்சப்பட உதவுகின்றன. மதிய உணவுடன் ஒரு கிண்ணம் தயிர் சேர்த்தால், மாலை வரை வயிறு நிறைவாகவும், லேசாகவும் இருக்கும்.எலும்புகளுக்கு அதிக சத்தை தரும் கால்சியம்தயிரில் அதிகமாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல் பாஸ்பரஸ், வைட்டமின் டி போன்றவை நிறைந்துள்ளன. இவை எலும்புகளையும் பற்களையும் வலுப்படுத்தி, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களைத் தடுக்க உதவுகின்றன. குறிப்பாக வயதானவர்கள், பெண்கள் தினமும் தயிர் சாப்பிடுவது மிக அவசியம்.நோய் எதிர்ப்பு சக்திக்கு புஸ்ட் புரோபயாடிக்ஸ் நிறைந்த தயிர், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. சளி, இருமல், தொற்று நோய்கள் வராமல் தடுப்பதில் தயிர் முக்கிய பங்காற்றுகிறது.

குறிப்பாக மழைக்காலம், வெயில் காலம் என்று எல்லா பருவத்திலும் இது பயன்படும். இதயத்துக்கு நல்ல நண்பன் தயிரில் உள்ள கொழுப்பு குறைவானது, மேலும் இது கெட்ட கொழுப்பைக் (LDL) குறைத்து, இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. தயிரில் உள்ள கொழுப்பு இதய நோய் வரும் அபாயத்தைக் குறைப்பதாக பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.எடை கட்டுப்பாட்டுக்கு உதவி குறைந்த கலோரி, அதிக புரதம் கொண்ட உணவாக நீண்ட நேரம் வயிறை நிறைவாக இருக்கச் செய்கிறது.

இதனால் அதிக உணவு உட்கொள்ளும் ஆசை குறைந்து, எடை குறைப்புக்கு உதவியாக இருக்கிறது.மேலும் தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் தோலை பளபளப்பாக்கி, முகப்பரு, கரும்புள்ளிகளை குறைக்கிறது. முடியில் தேய்த்தால் பொடுகு குறைந்து, முடி வலுவடைகிறது. பாரம்பரியமாகவே தயிர் முகம், தலைக்கு பயன்படுத்தப்படுவது இதனால் தான்.மன அழுத்தத்துக்கு இயற்கை தீர்வு

தயிரில் உள்ள சில சத்துக்களால் கிடைக்கிறது. தயிரை உட்கொள்வது மன அழுத்த ஹார்மோன்களைக் குறைத்து, மனதை அமைதிப்படுத்துகிறது. ஆனால் சிலருக்கு தயிர் அதிகமாக சாப்பிட்டால் வயிறு வீங்குதல், அலர்ஜி ஏற்படலாம். பால் ஒவ்வாமை உள்ளவர்கள் மருத்துவரிடம் கேட்ட பிறகே சாப்பிடலாம். இரவில் சிலருக்கு மோராக மாற்றி சாப்பிடுவது நல்லது.மொத்தத்தில், ஒரு சாதாரண கிண்ணம் தயிர் தினமும் உணவில் சேர்த்தால், உடல் முழுவதும் ஆரோக்கிய பலன் கிடைக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.