benefits of green beans 
லைஃப்ஸ்டைல்

பார்க்கத் தான் தம்மாத்தூண்டு.. ஆனா "ஹெவி வெயிட்" பலன் தருவாப்ல - அதனால தான் மரியாதையா "அவரை"-னு சொல்றாங்க போல!

இது ரத்த சோகை, வயிற்று பிரச்சனைகள், சிறுநீரக பிரச்சனைகளுக்கு நல்லது. அவரைக்காயை வேக வச்சு, மிளகு, சீரகம் சேர்த்து சாப்பிட்டா, உடம்பு ஃப்ரெஷ்ஷா இருக்கும்னு சொல்றாங்க.

Anbarasan

இந்த சின்ன அவரைக்காய் உடம்புக்கு என்னென்ன நன்மைகளை கொடுக்குது தெரியுமா? இந்திய உணவு மரபுல அவரைக்காய் ஒரு சூப்பர் ஃபுட் மாதிரி.

அவரைக்காய் (அறிவியல் பெயர்: Vigna unguiculata) ஒரு ஊட்டச்சத்து களஞ்சியம். இதுல வைட்டமின் A, C, K, பி-காம்ப்ளக்ஸ், ஃபோலேட், இரும்பு, மெக்னீஷியம், பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம் எல்லாம் இருக்கு. ஒரு கப் (சுமார் 100 கிராம்) அவரைக்காய்ல 40-50 கலோரி மட்டுமே இருக்கு, அதனால இது எடை குறைக்க விரும்புறவங்களுக்கு செம சாய்ஸ். இங்கே, இதோட முக்கிய நன்மைகளை பார்க்கலாம்!

1. செரிமானத்துக்கு அருமை

அவரைக்காய்ல நார்ச்சத்து (Dietary Fiber) நிறைய இருக்கு. இது செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்குது. சாம்பார் அல்லது பொரியலா சாப்பிட்டா, வயிறு லேசா இருக்கும், பசியும் கட்டுப்படும். ஆயுர்வேதத்துல, அவரைக்காய் வயிற்று உப்பசத்தை குறைக்க உதவும்.

2. இதயத்துக்கு நல்லது

அவரைக்காய்ல இருக்குற பொட்டாசியம், மெக்னீஷியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துது. இது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, கெட்ட கொலஸ்ட்ராலை (LDL) குறைக்க உதவுது. வைட்டமின் K ரத்த உறைவை சீராக்குது, அதனால இதய நோய் வர்ற வாய்ப்பு கம்மியாகுது. வாரத்துக்கு ரெண்டு முறை அவரைக்காய் சாப்பிட்டா, இதயம் ஃபிட்டா இருக்கும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பாடு

சர்க்கரை நோய் (Diabetes) உள்ளவங்களுக்கு அவரைக்காய் ஒரு சிறந்த உணவு. இதுல இருக்குற குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் (Low GI) ரத்த சர்க்கரையை திடீர்னு உயர விடாம பார்த்துக்குது. நார்ச்சத்தும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துது. அவரைக்காய் சாப்பிடுறது நீரிழிவு நோய் அறிகுறிகளை குறைக்க உதவுதுன்னு ஒரு வாய்வு குறிப்பிடுகிறது.

4. எடை குறைப்பு

எடை குறைக்க விரும்புறவங்களுக்கு அவரைக்காய் ஒரு பெஸ்ட் ஃப்ரெண்ட்! இதுல கலோரி கம்மி, ஆனா நார்ச்சத்து, புரதம் நிறைய இருக்கு. இது வயிறு நிறைய இருக்குற மாதிரி உணர வைக்குது, அதனால பசி கட்டுப்படுது. அவரைக்காயை வேக வச்சு, மசாலா தூவி சாப்பிட்டா, டயட் பண்ணுறவங்களுக்கு அருமையான ஸ்நாக்ஸ் இது.

5. சருமம் - முடி

அவரைக்காய்ல இருக்குற வைட்டமின் C, A, ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் சருமத்தை பளபளப்பாக்குது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிச்சு, முதுமையை தள்ளி வைக்குது. ஃபோலேட், இரும்பு முடி உதிர்வை குறைச்சு, முடியை வலுப்படுத்துது. ஆயுர்வேதத்துல, அவரைக்காய் ரத்தத்தை சுத்தப்படுத்தி, சரும பிரச்சனைகளை குறைக்க உதவுது.

6. எலும்பு வலிமை

வைட்டமின் K, மெக்னீஷியம், கால்ஷியம் இருக்குறதால, அவரைக்காய் எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுது. இது எலும்பு முறிவு, ஆஸ்டியோபோரோசிஸ் மாதிரியான பிரச்சனைகளை தடுக்குது. குறிப்பா, பெண்களுக்கு மெனோபாஸ் காலத்துல எலும்பு பலவீனம் வராம இருக்க, அவரைக்காய் செம உதவியா இருக்கும்.

7. நோய் எதிர்ப்பு சக்தி

வைட்டமின் C, ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைஞ்ச அவரைக்காய், நோய் எதிர்ப்பு சக்தியை பூஸ்ட் பண்ணுது. இது உடம்புல இருக்குற ஃப்ரீ ரேடிக்கல்ஸை எதிர்த்து, நோய்கள் வராம பாதுகாக்குது. காய்ச்சல், சளி மாதிரியான பிரச்சனைகளை தவிர்க்க, அவரைக்காயை அடிக்கடி சாப்பிடலாம்.

ஆயுர்வேத பார்வையில்

ஆயுர்வேதத்துல, அவரைக்காய் உடம்புல உஷ்ணத்தை குறைக்குற, பித்தத்தை சமநிலைப்படுத்துற ஒரு காய்கறியா பார்க்கப்படுது. இது ரத்த சோகை, வயிற்று பிரச்சனைகள், சிறுநீரக பிரச்சனைகளுக்கு நல்லது. அவரைக்காயை வேக வச்சு, மிளகு, சீரகம் சேர்த்து சாப்பிட்டா, உடம்பு ஃப்ரெஷ்ஷா இருக்கும்னு சொல்றாங்க.

அவரைக்காயை பொரியல், குழம்பு, சாம்பார், அல்லது சாலட் மாதிரி சாப்பிடலாம். அதிகமா வேக வைக்காம, லேசா வதக்கி சாப்பிட்டா, ஊட்டச்சத்து கெடாம இருக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்