இப்போல்லாம் நாம கீரை சாப்பிடுறதையே மறந்துட்டோம், அதனால நாமளே அந்த கீரைகளோட பயன்களை ஒரு சின்ன recap பண்ணி பத்துக்கலாமா, நம்ம சித்த மருத்துவத்துல கீரைகளுக்கு ஒரு செம்மையான இடம் இருக்கு. ஒரு பழமொழி சொல்லுவாங்க – "உணவே மருந்து". அதுல கீரை ஒரு பெரிய பங்கு வகிக்குது. உதாரணமா, பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிட்டா கண்ணு பார்வை தெளிவாயிடும். மணத்தக்காளி வயிறு பிரச்சனையை சரி பண்ணும். வெண்டயக்கீரை சர்க்கரை நோயாளிகளுக்கு தீர்வ வேலை செய்யும்.
இது மட்டுமில்ல, கீரைகள்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைய இருக்கு. இது உடம்புல உள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸை கட்டுப்படுத்தி, புற்றுநோய் வராம பாதுகாக்குது. கால்சியம், இரும்பு, வைட்டமின்கள் இதெல்லாம் கிடைக்குறதுனால, சின்ன பசங்க முதல் பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் கீரை நல்லது.
நம்ம முன்னோர்கள் இந்த கீரைகளை தினம் தினம் சாப்பாட்டுல சேர்த்து, ஆரோக்கியமா வாழ்ந்தாங்க. இப்போ நம்மளுக்கு கீரைன்னா பசலைக்கீரை, முருங்கைக்கீரைன்னு ரெண்டு மூணு தான் தெரியுது. ஆனா, உண்மையிலேயே நூறு வகை கீரைகள் இருக்கு, ஒவ்வொன்னுத்துக்கும் ஒரு ஸ்பெஷல் யூஸ் இருக்கு.
எத்தனை வகை கீரைகள் இருக்கு?
இப்போ மெயின் கேள்விக்கு வருவோம் – எத்தனை வகை கீரைகள் இருக்கு? நம்ம ஊர்ல "கீரைகள்"னு ஒரு பெரிய லிஸ்ட் இருக்கு. சிலர் சொல்றாங்க 40 வகைனு, சிலர் சொல்றாங்க 60 வகைனு, இன்னும் சிலர் 100 வகை கீரைகள் இருக்குன்னு சொல்றாங்க.
தமிழ்நாட்டுல பொதுவா பேசப்படுற, ஆவணப்படுத்தப்பட்ட கீரைகளை பார்த்தா, சுமார் 60-70 வகைகள் வரைக்கும் புழக்கத்துல இருக்கு. இதுல பசலைக்கீரை (spinach), முருங்கைக்கீரை (drumstick leaves), அரைக்கீரை(amaranth), மணத்தக்காளி கீரை (black nightshade), வல்லாரை கீரை (brahmi) இப்படி பல பிரபலமானவையும், இதுக்கு மேல சில காட்டு கீரைகள் (wild greens) இருக்கு.
சில கீரையோட பயன்கள்:
பசலைக்கீரை
இது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச கீரை தான். இதுல இரும்பு சத்து (iron) அதிகமா இருக்கு, ரத்த சோகை இருக்குறவங்களுக்கு இது ரொம்ப நல்லது. சின்ன பசங்களுக்கு இதை மசியலா பண்ணி கொடுத்தா, நல்லா வளருவாங்க. சாதம், சூப், பொரியல் எல்லாம் இந்த கீரைல பண்ணலாம்.
முருங்கைக்கீரை
இது ஒரு சூப்பர் கீரைனே சொல்லலாம். வைட்டமின் A, C, கால்சியம் எல்லாம் இதுல நிறைய இருக்கு. எலும்பு வலிமைக்கு இதுல இருக்குற சத்து பயன்படுத்து. சூப் பண்ணி குடிச்சா, சளி, இருமலை கட்டுப்படுத்தும். கர்ப்பிணி பொண்ணுங்களுக்கு இந்த கீரையை கொடுத்த நல்ல கரு வளர்ச்சி இருக்கும்.
அரைக்கீரை
இது நம்ம ஊர் கிராமங்கள்ல அதிகமா வளரும். ரத்தத்தை சுத்தப்படுத்துறதுக்கு இது ஒரு நல்ல மருந்தா இருக்கும். கூட்டு, பொரியல்னு சமைச்சு சாப்பிட்டா செரிமானம் நல்லா இருக்கும்.
மணத்தக்காளி கீரை
இது வயிறு புண்ணுக்கு நல்ல மருந்து. வாய்ப்புண், வயிற்று எரிச்சல் இருக்குறவங்க இதை சாப்பிட்டா சரியாயிடும். சின்ன பசங்களுக்கு வயிறு சரியில்லைன்னா, இதை சமைச்சு கொடுங்க சரியாயிடும்.
வல்லாரை கீரை
இது "மூளைக்கு டானிக்"னு சொல்லுவாங்க. நினைவாற்றலை அதிகரிக்கும். தலைமுடி உதிர்ற பிரச்சனைக்கு இதை சாப்பிட்டா நல்ல ரிசல்ட் கிடைக்கும். சட்னி, துவையல்னு பண்ணி சாப்பிடலாம். குழந்தைகளுக்கு தேர்வு நேரங்களில் இந்த கீரையை சமைச்சி குடுங்க, அப்பறோம் பாருங்க அவங்களோட மார்க் எப்படி வருதுன்னு
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்