சேமிப்பு என்று வரும்போது, பாதுகாப்பான வழிகளை தான் மக்கள் எப்போதும் எதிர்பார்ப்பார்கள். இந்தியாவை பொறுத்தவரை நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கி மற்றும் அஞ்சலகங்கள் தான் மிகவும் பாதுகாப்பான இடங்களாக உள்ளது. அதில் சேமிக்க பெரிய அளவில் நாம் சிரமப்பட வேண்டாம். பங்கு சந்தை போல தினமும் நமது நேரத்தை அதற்காக செலவிட தேவை இருக்காது.
ஏன் வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்பு சிறந்தது?
நீங்கள், உங்களுக்கு அருகில் உள்ள வங்கி அல்லது ஒரு அஞ்சலக கிளையை அணுகினால் போதும். உங்களுக்கு தேவையான திட்டத்தை தேர்வு செய்து அதில் நீங்கள் பணத்தை சேமிக்க முடியும். வங்கி மற்றும் அஞ்சலகத்தை பொறுத்தவரை நிலையான வட்டி விகிதங்கள் கிடைக்கிறது. ஒரு வேலை அன்றைய தேதியில் பங்கு சந்தை சரிவை சந்தித்தாலும், உங்களுக்கு நிலையான வட்டி விகிதம் வழங்கப்படும். மேலும் இதில் பணத்தை சேமிக்க சிரமப்பட வேண்டும். எளிதாக ஒரு கணக்கை திறந்து உங்களால் பணத்தை சேமிக்க துவங்க முடியும்.
மேலும் படிக்க: ஐந்து வருட சேமிப்பு.. ரிஸ்க் இல்லாமல் அதிக லாபம் தரும் "வங்கி சேமிப்பு" திட்டம்!
வங்கி FD திட்டம்
வங்கிகளில் செயல்படும் FD திட்டம் பற்றி நமக்கு தெரியும். சில நாள்கள் முதல் 5க்கும் மேற்பட்ட ஆண்டுகள் கூட நம்மால் ஒரு தொகையை சேமிக்க முடியும். அதற்கு, ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்ட வட்டி விகிதம் நமக்கு வழங்கப்படும். அதே போலத்தான், அஞ்சலகத்தில் TD என்ற திட்டம் செயல்பட்டு வருகின்றது. இந்த TD திட்டமும் ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் பணத்தை சேமிக்க உதவுகிறது. மத்திய அரசு நிர்ணயம் செய்த வட்டி விகிதங்களும் இதற்கு அளிக்கப்படுகிறது.
அஞ்சலக TD திட்டம்
டைம் டெபாசிட் திட்டம் என்பது அனைத்து அஞ்சலகத்தில் இருக்கும் ஒரு திட்டமாகும். இந்த திட்டம் மூலம் குறிப்பிட்ட ஆண்டுகள் உங்களால் பணத்தை சேமித்து அதற்கு சிறந்த வட்டியோடு லாபம் பெறமுடியும்.
TDயில் இணைவது எப்படி?
ஒரு தனி நபர், அல்லது மூன்று பேர் வரை இணைந்து கூட்டுக்கணக்காகவும் இந்த திட்டத்தில் இணைய முடியும். 10 வயது பூர்த்தியடைந்த அனைவரும் இந்த திட்டத்தை தங்களுடைய பெயரிலேயே துவங்கலாம். மேலும் 10 வயது நிரம்பாதோருக்கு பதிலாக அவர்களது பாதுகாவலரின் பெயரில் இந்த திட்டத்தை துவங்க முடியும்.
1, 2, 3, மற்றும் 5 ஆண்டுகள் பணத்தை சேமிக்கும் வண்ணம் உங்களால் இந்த TDயில், திட்டத்தை தேர்வு செய்ய முடியும். நீங்கள் சேமிக்கும் பணத்திற்கு வரி சலுகைகளும் உண்டு. நீங்கள் தேர்வு செய்த திட்டத்திற்கு ஏற்ப, கணக்கு துவங்கிய 1, 2, 3 அல்லது 5ம் ஆண்டில் வட்டியோடு உங்களுக்கு பணம் திரும்ப கிடைக்கும். அதே போல நீங்கள் இந்த திட்டத்தை நீடிக்க விரும்பினாலும் அதை செயல்படுத்த முடியும்.
மேலும் படிக்க: ஒரே ஒரு அஞ்சலக சேமிப்பு கணக்கு.. எவ்வளவு பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
வட்டி கணக்கீடு
நீங்கள் இந்த TD திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு 2 லட்சம் ரூபாயை சேமிக்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது 5 ஆண்டுகளின் முடிவில் உங்கள் 2 லட்சம் ரூபாய்க்கு (7.5 சதவிகிதம்) வட்டியாக மட்டும் 89,000 ரூபாய் வந்திருக்கும். ஆகா, 5 ஆண்டுகளின் முடிவில் உங்கள் கையில் சுமார் 2,89,000 ரூபாய் இருக்கும்.
வட்டி விகிதம்
நீங்கள் இந்த திட்டத்தில் ஓராண்டு பணத்தை சேமிக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு 6.9 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது. அதே போல 2 ஆண்டுகள் என்றால் 7 சதவிகிதமும். மூன்று ஆண்டுகள் என்றால் 7.1 சதவிகிதமும், 5 ஆண்டுகள் என்றால் 7.5 சதவிகிதமும் வட்டி வழங்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்